பக்கம்:சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ..pdf/126

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

119 சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ

கம்பு உற்று அலறும் - சங்குகள் சேர்ந்து முழங்கும். வெம்பற்று அவா அறுத்தோர் - வெம்மையான பற்றையும் அவாவையும் நீக்கிய முனிவர்கள். வேட்டிவெற்பர் - திருவேட்டியிலுள்ள மலைக்குரிய தலைவர்; குறிஞ்சி நிலத் தலைவர்; இவ்வாறு கூறுதல் மரபு. வெற்பர்தம் பற்று உறுவாள் - தலைவருடைய தொடர்பை அடைந்தவளாகிய தலைவி. ஒர் நோயால் வருந்துதலை ஒழிக்க - காதல் நோயால் வருத்தமுறுவ தைப் போக்க. கொம்பு அற்ற தேகர் - தேகர் என்ற சொல்லிலுள்ள கொம்பு அற்ற தகரினுடைய (ஆடு). தலைதுணிப்பான் - தலையை வெட்டுவதற்கு. யாய் - குறித்தனள் - தாய் எண்ணினாள்.

தேகள் என்ற சொல்லில் முதலில் உள்ள கொம்பை அழித்துவிட்டால் தகர் என்ற சொல் வரும்.

முன்பே கொம்பு போன தேகத்தையுடையவர் தலையை இப்போது வெட்ட முற்பட்டாள் என்று மற்றொரு பொருள் தொனித்தது.

காந்தமலை முருகன்

பின்வருபவை இவருடைய வழிபடு தெய்வமாகிய காந்தமலை முருகனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடியவை. இவருடைய ஊராகிய மோகனூரில் உள்ள குன்று காந்தமலை. அதன் பெயரை யே இவர் சென்னையில் உள்ள தம் இல்லத்துக்கு வைத்துள்ளார். இந்தப் பாடல்களும் தோழியின் கூற்றாக வெறிவிலக்குத் துறையில் அமைந்தவை.