பக்கம்:சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ..pdf/128

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

181 சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ

மருந்து - இந்தத் தலைவியின் காமநோய்க்கு ஏற்ற பரிகாரத்தை. வரைதல் இன்றி மையினைச் சிந்துவதால் என் பயன் - திருமணம் செய்வதின்றி ஆட்டைப் புலி கொடுப்பதனால் உண்டாகும் பயன் யாது? எழுதுவதில்லாமல் வெறும் மையைச் சிந்துவதனால் என்ன பயன் என்று தொனிப்பது ஒரு நயம். வஜரதல்மணம் புரிதல், எழுதுதல். மை-ஆடு, எழுதும் மை. சிந்துதல்-அழித்தல், வீணே தரையில் சிந்துதல்.

தீமேல் இவர் மை - தீமை

நாமேல் நடக்கும் புலவர்தம் பாடல் நயந்தவர்க்குப்

பூமேல் வராநிலை ஈபவன்

காந்தப் பொருப்பினிலே

ஏமேல் இவர்சிலை யான்மால் இவட்கென

எண்ணிலள் தாய்;

தீமேல் இவர்மையைப் போக்கினாள்;

தீமையைப் போக்கிலளே.

நாமேல் நடக்கும் புலவர் - கவிநடையுடன் பாடும் புலவர் "நாமேல் நடவீர் நடவீர் இனியே" (கந்தர் அநுபூதி) நயந்து அவர்க்கு. ஏ. மேல் இவர் சிலையான் மால் இவட்கு என - அம்பு மேலே சார்கின்ற வில்லையுடைய தலைவன் பாலுள்ள காதல் இவளுக்கு உள்ளது என்று. தி மேல் இவர் மையைப் போக்கின்ள்அக்கினி மேலே ஊர்ந்து வரும் ஆட்டைப் பலியிட்டனள்; அக்கினியின் வாகனம் ஆடு. தீமையைதலைவிக்கு உள்ள துயரத்தை தீயின் மேல் ஏறுகின்ற கறுப்பைப் போக்கினாளேயன்றி அதற்குக் காரணமான தீயின் தன்மையைப் போக்கிலள் என்பது தொனி.