சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ - 130
பானசிங் கத்தை அறிந்திலள்; ஆட்டை
அரிந்தனளே.
ஊனை - உடம்பை. யாய் - தாய். ஆனையைத் தாக்கிய அன்பான சிங்கத்தை - ஆனையைப் பொருது ஒட்டிய அன்பையுடைய சிங்கம் போன்ற தலைவனை. தோழியும் தலைவியும் தினைப்புனம் காத்துக் கொண்டிருந்த பொழுது ஒரு மதயானை அவர்களைத் துரத்த, அவர்கள் அஞ்சி ஓடியபொழுது தலைவன் எதிர்ப்பட்டு அந்த யானையைப் பொருது ஒட்டி அவர்களைக் காப்பாற்றினான். அது முதல் தலைவி அவன் மேல் காதல் கொண்டாள். இந்த நிகழ்ச்சியை எண்ணி இவ்வாறு சொன்னாள் தோழி. இதைக் களிறு தருபுணர்ச்சி என்று அகப்பொருள் நூல் கூறும்.
ஆனையைத் தாக்கிய சிங்கத்தை அறிந்திலள்; ஆட்டை அரிந்தனள் என்றதில் சிங்கம், ஆடு என்ற வேறுபாடும் அறிதல், அரிதல் என்னும் வல்லின இடையின வேறுபாடும் வந்தது ஒரு நயம்.
ஆடி - ஆணி
நாடிய யோகியர் உள்ளத் திருமலர்
நண்ணுகுகன் வீடெனக் கோயில்கொள் காந்த மலையினில்,
வேதனையில் - நீடிய மங்கை மணஞ்செய் செயலை
நினைத்திலள்யாய்: - - ஆடியை ஆனி செயல்பிழை என்றே அறிந்திலளே. - - உள்ளத் திருமலர் - இதய புண்டரிகம். வீடு எனதனக்குரிய படை வீடு என்று. வேதனையில் நீடிய மங்கை - துயரத்தில் நெடுங்காலம் ஆழ்ந்துள்ள தலைவி