பக்கம்:சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ..pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ se

பால் நாடார்

தூத்துக்குடியில் பால் நாடார் என்ற வக்கீல் ஒருவர் இருந்தார். அவர் கம்பராமாயணத்தை ஆழ்ந்து பயின்றவர். மேல் நாட்டுக் கவிஞர்களுடன் கம்பரை ஒப்பிட்டுப் பேசுவார். ஒவ்வோர் ஆண்டும் காரைக்குடியில் நடைபெறும் கம்பன் திருதாளுக்குத் தவறாமல் வருவார். இவரும் அதற்குப் போவதுண்டு.

ஒரு முறை காலையில் எல்லாருக்கும் காபி வழங்கினார்கள். பால் நாடார் காபி அருந்துவதில்லை. ஆகவே, "எனக்குப் பால் கொடுங்கள்" என்றார். அருகில் இருந்த இவர், "உங்களைப் பால் நாடார் என்று சொல்கிறார்கள். இப்போது பாலை நாடுகிறீர்களே!" என்று வேடிக்கையாகக் கேட்டார். -

கூட்டலும் பெருக்கலும்

ஒர் ஆசிரியர் மாணவனுக் குக் கணக்குச் சொல்லிக் ல் கொடுத்துக் கொண்டிருந்தார். "பலமுறை கூட்டுவதையே ஒரு முறை பெருக்கலால் தெரிந்து கொள்ளலாம். கூட்டலும் பெருக்கலும் ஒரு வகையில் ஒன்றே" என்று சொன்னார். பையன், "புரியவில்லையே!" என்றான். அருகில் இருந்த இவர், "கூட்டலும் பெருக்கலும் ஒன்று என்று நம் வீட்டு வேலைக்காரிக்குக்கூடத் தெரியுமே?" என்றார்.