பக்கம்:சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ..pdf/83

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ 76

"தலையா மகளே, என்னிடம் கலையா மகளாய் இரு

鲇 என்பேன்" என்றார். -

(கலையாமகள் - கலை ஆம் மகள், கலையாத மகள்.)

இப்பொழுதே இடம்

திருவல்லிக்கேணியில் ஒரு திருமணம் நடைபெற்றது. மணமகனுக்கு வலப்பக்கம் மணமகள் அமர்ந்திருந்தாள். பொரியிடும் போது புரோகிதர் பெண்ணை மணமகனுக்கு இடப்பக்கமாக வந்து அமரச் சொன்னார். அவள் அமர வாகாக மணமகன் சற்றே நகர்ந்தான். இவர், "இப்போதே இடம் கொடுக்க ஆரம்பித்து

விட்டார்" என்றார். -

பூரி

மாலையில் பலகாரம் பண்ணுகிறவர் இவர், வெளியூருக்குச் சென்றிருந்த போது தங்கியிருந்த வீட்டு நண்பர், "உங்களுக்கு மாலையில் என்ன பண்ணச் சொல்லலாம்? பூரி பிடிக்குமா?" என்று கேட்டார். இவர், "என் பேரை நினைத்தால் தெரிந்து

கொள்ளலாமே!" என்றார். "என்ன சொல்கிறீர்கள்?" என்று நண்பர் இவரை நிமிர்ந்து பார்த்தார். "ஜகந்நாத்துக்குப் பூரி பிடிக்காமல் இருந்தால் அங்கே இருப்பாரா?" என்று பதில் வந்தது. (பூரி என்ற தலத்தில் இருக்கும் பெருமாள் ஜகந்நாத்.)