உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ..pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91 சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ

இவர், "இரவு இங்கேயே சாப்பிடலாம்; வந்து விடுங்கள்" என்றார். நண்பர், "நான் வர நெடுநேரமாகும். வெளியிலேயே சாப்பிட்டு விடுகிறேன்" என்றார். 'இல்லை; இங்கே எவ்வளவு நேரமானாலும் வரலாம். எங்கள் வீட்டில் கடை சிப்பந்தி வந்து கடைசிப் பந்தி நடக்கும். அவர்கள் வர நேரமாகும். ஆகவே நீங்கள் எப்போது வந்தாலும் சாப்பிடலாம் என்றார். இவர். (கடைசிப்பத்தி - கடையில் வேலை செய்யும் சிப்பத்தி, கடைசியில் நடக்கும் உணவுப் பந்தி.) கொய்யாப் பழம்

இவர் அன்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஒர் அன்பர் கொய்யாப்பழம் வாங்கிக் கொண்டு வந்தார்."எந்தப் பழத்திலும் கொய்யாப் பழமே சுவையுடையது" என்றார் இவர். "ஏன்? மாம்பழம், பலாப்பழம், வாழை என்ற முக்கனிகள் இல்லையா?" என்று ஒருவர் கேட்டார்.

"அவையும் சுவையுடையனவே."

"அப்படியானால் கொய்யாப் பழம் மட்டும் சுவையுடையது என்கிறீர்களே?"

"நான் இந்தக் கொய்யாப் பழத்தைச் சொல்லவில்லை. எந்தப் பழமானாலும், கொய்த பழத்தை விடக்கொய்யாத பழமே சுவையுடையதென்றேன்; அதாவது, தானே முதிர்ந்து உதிர்ந்ததனால் சுவை மிகுதியாக இருக்கும்".