பக்கம்:சிரித்த நுணா.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

VII. இயற்கை 1. இயற்கை பொருத்தம் ! எழுந்து புரண்டு பாய்ந்தே இடித்துக் கரையை மோதி அழுந்து கின்ருய் துயரில் -கடலே ! அன்பினைப் பெற்ற துண்டோ ? I வெள்ளி நிலவெ ரிக்க வேதனை நெஞ்சில் துள்ளக் கள்ளனைப் போல வந்தான் ;-கடலே ! கண்ணினைப் பொத்தி நின்ருன். 2 எட்டிப் பிடித்துக் கையால் எடுத்திட நான்மு யன்றேன்: சிட்டுப் பறப்ப தைப்போல்-கடலே ! சென்று மறைந்தே போனன். 3 பாலொளி சொட்டு கின்ற பச்சைப் பனைமரத்தின் ஒலையிற் பாட்டி சைத்தான்;-கடலே ! ஒடையில் முணுமு னுத்தான். 4 தென்றலாய் ஓடி வந்தான் : மன்றல் புரிவன்' என்ருன்; அன்றிலாய் வாழ்வோம்’ என்ருன்;-கடலே! அண்டத் திற்போய் மறைந்தான். 5 27

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிரித்த_நுணா.pdf/35&oldid=828822" இலிருந்து மீள்விக்கப்பட்டது