பக்கம்:சிரித்த நுணா.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அல்லும் பகலும் வந்தே அழகு கவிதை சொல்வான்; புல்நுனிப் பூவில் நின்றே-கடலே ! புதுப்புதுச் செய்தி சொல்வான். - தேடித் தேடி வருவேன் சென்ற வழிக ளெல்லாம்; ஏடி!' எனவி வரிப்பான்;-கடலே! எங்கும் நிறைந்தி ருப்பான். செந்தில் முருகன்' என்பார்; "தீங்குழற் கண்ணன்' என்பார்; எந்தப் பெயரோ ?' என்றேன்;-சடலே! "இயற்கை பொருத்தம்! என்ருன். விண்ணெழிற் கண்ட கண்கள் வேருென்று வேண்டு மோ,சொல் ? கண்கட் குரிய தொன்றைக்-கடலே! கண்டுநான் கொண்டேன்! கொண்டேன்! 23

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிரித்த_நுணா.pdf/36&oldid=828823" இலிருந்து மீள்விக்கப்பட்டது