பக்கம்:சிரித்த நுணா.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. பட்டினச் சேரி வட்டமாய் நீண்டு யர்ந்த வானத்து மதிற்சி றைக்குள் கட்டுண்டு கிடப்ப தைப்போற் கடல்தோன்றும்! அக்க டல்மேல் எட்டடி உயர்ந்து சீறி எழுகின்ற அலைக ளெல்லாம் கட்டினை வெருண்ட றுத்த வெண்மயிர்க் காளைக் கூட்டம் வள்ளல்போல் வழங்கும் நீல மறிகடல் கிழித்துச் செல்லும் வள்ளத்துப் பாயோ, வெய்யோன் ஒளிபட வான்மு கட்டில் வெள்ளி முக்கோணம் போலத் தோன்றிடும்! விரிநீர் மீதோ துள்ளிடும் மீன்கள் தூய பசும்வெள்ளித் துரறல் தம்பி! கடலோர மணல்மேற் கட்டு மரக்கூட்டம்! கடலோ ரத்துப் படகுகள் படுத்த யானை! பட்டினச் சேரி சுற்றி 29

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிரித்த_நுணா.pdf/37&oldid=828824" இலிருந்து மீள்விக்கப்பட்டது