பக்கம்:சிரித்த நுணா.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெடுகிலும் கழிகள்; அநத நீள்கழி முன்னுள் வேந்தர் கொடிபடை யோடு வாழ்ந்த கோட்டையின் அகழி போலாம்! தரங்கத்துச் செல்வம் மீனும் தனத்தேடச் சென்ற ஆளன் உரத்தினில் உயிரை ஒட்டி ஒவ்வொரு நொடியும் சிற்றிற் புறத்தினில் வந்து பார்ப்பாள் போனவன் மனைவி! அன்னேன் மரத்தினைக் கடற்ப ரப்பில் வரும்வரை விழிகள் தேடும்! அங்காடிக் கூடை முன்னர் அழுமொரு குழவி ஒன்று பங்கில்லை என்று தாயின் மடியினைப் பற்றிக் கெஞ்சும்: தெங்கின்கீழ்த் துங்கு மொன்று; செழுந்தாழை வேரில் வந்து தங்கிய நண்டைச் சுட்டுத் தன்பசி அடக்கும் ஒன்றே! விலேடோகா மீன்க ளெல்லாம் வீட்டின்முன் காயும்: ஈர வலையெலாம் ஒர்பு றத்தில் மணல்மீது உலரும் என்றும் 30

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிரித்த_நுணா.pdf/38&oldid=828825" இலிருந்து மீள்விக்கப்பட்டது