பக்கம்:சிரித்த நுணா.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. கவிப் பெண் மேற்றிசையிற் சுழல்பரிதி வானச் செம்மை மெருகிட்டான் ஒடுதங்கே இரத்த ஆறு! காற்றெங்கும் மலர்மணத்தை அள்ளி வீசக் கண்ணயர்ந்தேன்; அடடா!என்னைச் சொக்க வைக்கும் தோற்றத்தை என்சொல்வேன்! இவளைப் போன்ற தோகையைநான் கண்டதில்லை! நீயா ரென்றேன்! வேற்கண்ணுள், கவிப்பெண் நான்' என்ருள்! அந்த வேசியிள நகைகண்டு விழித்தேன்; காணேன்! I தேடிப்பார்த் தேனவளேக், கண்டே னில்லை! தெவிட்டாத தெள்ளமுதாய் உள்ளம் பொங்க ஏடெடுத்தேன் கவியெழுத, என்முன் வந்தாள்: எங்கேடி சென்ருெளிந்தாய்? என்றேன்; இந்த ஒடையிலே, மலரழகில், ஒவி யத்தில், உணர்ச்சிமிகு கவிதையினில், அனலே வீசும் கோடையினில், குளிர்காற்றில், குமரிப் பெண்கள் குறுநகையில் இளந்தளிரிற், குன்றில்!” என்ருள். 2 உருண்டோடும் ஆற்றிலவள் ஒளிந்தே வந்தாள்; 'உச்சிமலைத் தேன்பிழிந்து வந்தே னிப்போ(து); அருந் தென்ருள்; மயங்கிவிட்டேன்; அவளு மந்த அடர்மரத்திற் குயிலாகக் கிளேயி லாடி அருகழைத்து வாயிற்செவ் வாயை வைத்தே அள்ளிவிட்டாள் உள்ளமெலாம்; இன்பம், இன்பம் பெருகுதடா! அவளில்லா இடமே யில்லை; பேச்சில்லை; துன்பமெனும் பேச்சே யில்லை! 3 32

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிரித்த_நுணா.pdf/40&oldid=828828" இலிருந்து மீள்விக்கப்பட்டது