பக்கம்:சிரித்த நுணா.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க் தீமைக் கிடமில்லே! 'என்ன எழுதுவ தென்று பலப்பல எண்ண மிடுமதி காலேயிலே, 'என்னே எழு'தெனக் கன்னல் மொழிக்குயில் இளமரக் காவில் இசைமீட்டும்: புன்னை மலர்சிரித் தென்னே மயக்கும்; புற்றரை என்னை வரைக என்னும்; பொன்னை புருக்கி இளம்பரி திவானில் பூரிப் புடனெழுந் தோடிவரும்! பாலேப் பொழிந்து களைத்த சிறுமதி பார்வையால் தீட்டுக’ என்றுகெஞ்சும்; காலேக் குளத்தினில் பூத்த மரைமலர் கன்னியர் சேல்விழி என்னை என்னும்: சாலை மரத்தினிற் பாய்ந்து பிரியாதே சல்லாபஞ் செய்யு மணிற்குலமும் காலங் கடத்தா "தெழுதெழு தென் றென்முன் கத்தின! ஆனல்,என் கண்ணெதிரே. அடுபசி ஒங்கி உயிர்கள் துடித்திட அடிமைப் பெருமலே நெஞ்சழுந்தக் கொடுமை சகியாத் தமிழ்த்தாய் தலைவிரி கோல முடனெழுங் காட்சிகண்டேன்! கடமை நினைந்திடு தமிழா! தமிழ்ப்பொதுக் கலப்பினில் வேற்றுமைக் கேதிடம்? திடம்வரும் தோளினில்; தீரம்வரும் நெஞ்சில்; தீமைக் கிடமிங் கில்லையடா! 33

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிரித்த_நுணா.pdf/41&oldid=828829" இலிருந்து மீள்விக்கப்பட்டது