பக்கம்:சிரித்த நுணா.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. பெரியார் உடலில் முதியார்; உணர்வில் இளையார்: உழைப்பிற் சலியார் எங்கள் பெரியார்! கடலின் கருத்தார்; கலங்கா உளத்தார்; காட்சிக் கெளியார் எங்கள் பெரியார்! வானின் பெரியார்; நீரின் பெரியார்: வளியின் பெரியார்; நிலத்தின் பெரியார்; மானத் தோடு திராவிட மக்கள் வாழ உழைக்கும் இளைஞர் பெரியார்! வடவர்க் கரியார், மடமைக் கொளியார்; வாய்மைக் குரியார் எங்கள் பெரியார்! இடிசொல் லுடையார்; ஏழைக் கடியார்; எங்கள் திராவிடத் தந்தை பெரியார்! புதுவாழ் வளிக்கும் வழியார் பெரியார்: புராணக் குப்பைக் கெரியாம் பெரியார்; எதுவந் தாலும் கலங்கார் பெரியார்; எதிர்ப்போர் சாய்க்கும் வலியார் பெரியார்! நான்மறை சாதி உயர்வு தாழ்வு நரியார்க் கெங்கள் பெரியார் புலியார்! தேன்மொழி வாழ இந்தி எதிர்த்த தீரர்; வைக்கம் வீரர் பெரியார்! 42

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிரித்த_நுணா.pdf/50&oldid=828839" இலிருந்து மீள்விக்கப்பட்டது