பக்கம்:சிரித்த நுணா.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. அண்ணு வாழ்க! அண்ணு வாழ்க! வாழ்க!-அறிஞர் அண்ணு வாழ்க! வாழ்க! கண்ணும் திராவிட நாட்டின்-ஒளிக் கதிரே! மழையே! வாழ்க! ஏழை எளியவர் இல்லாத்-தனி இன்பத் திராவிடம் காண வாழை போலத் தம்பி-பலர் வளர்த்துத் தந்த அறிஞர்: எழுத்தாற் சொல்லாற் செயலால்-நாட்டை இழுத்தார் எங்கள் அண்ணு! புழுத்த புராணக் குப்பை-உள்ளே புகுந்து பழமை இடித்தார்! புத்தி தீட்டித் தந்தார்!-நல்ல புலமை ஈட்டித் தந்தார்! கத்தி அரிவாள் இல்லாப்-பொது உடைமை கூட்டிவந்தார்! பண்டைத் தமிழர் வாழ்வைத்-தமிழ்ப் பண்பை விளக்கித் தந்தார்! பெண்ணும் ஆணும் ஒன்ருய்-இனிப் பெறுவோம் திராவிட நாடே ! 46

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிரித்த_நுணா.pdf/53&oldid=828842" இலிருந்து மீள்விக்கப்பட்டது