பக்கம்:சிரித்த நுணா.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதியற்று மக்கள் எங்கும் கலங்கினர்! அறிஞர் பல்லோர் புதுப்புது முறையில் ஊக்கிப் புகுத்தினர் உணர்ச்சி நாட்டில்! எதிர்த்தனர் சூலைத் திங்கள் ஈரேழாம் நாளில்! வானம் அதிர்ந்திடப் பஸ்தீய் கோட்டை அழித்தனர்! அடிமைப் பேயைக் கதித்தனர் ஒன்று சேர்ந்து காளைகள்! கொடுங்கோல் ஆட்சி விதிர்த்தது! மண்ணில் மக்கள் விடுதலை முழக்கஞ் செய்தார்! வாழிய சூலைத் திங்கள் பதினுன்காம் பெருநாள் வாழ்க! வாழிய மக்கள் தோட்கு வலிதந்த புரட்சி நன்னுள்! வாழிய உழவர் கூலி, வளமிகு பிரான்சு தேயம்! வாழிய மக்கள் ஒன்ருய்! விடுதலை வாழ்க மன்னே! 52

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிரித்த_நுணா.pdf/59&oldid=828848" இலிருந்து மீள்விக்கப்பட்டது