பக்கம்:சிரித்த நுணா.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. மாணவர் மன்றம் வாழ்க! உலகத்துக் குயிர்நாடி, உலகத்துள் தனிப்பட்ட ஒவ்வோர் நாட்டின் கலகத்துக் குயிர்நாடி, காப்புக்கும் உயிர்நாடி, கண்கள் ஒத்த பலகலைக்கும் உயிர்நாடி, பண்பிற்கும் உயிர்நாடி கல்வி கேள்வி நிலைபெற்ற மாணவர்கள்! மன்றத்து மாணவரே! நினைவில் வைப்பீர்! மாணவர்காள்! சென்னை நகர் மாணவர்மன் றப்புலிகாள்! வாழ்க! வாழ்க! வீணாகப் போக்காதீர் பொன்னை காலத்தை! விரைந்து கற்பீர்! நாணலென வளைகின்ற புதுப்பழக்கம் நரிப்பழக்கம் நம்ம தல்ல! கோணலெலாம் நிமிர்த்திடுவீர்! கொடுமையெலாம் சாய்த்திடுவீர்! குறைத விர்ப்பீர்! 72

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிரித்த_நுணா.pdf/79&oldid=828870" இலிருந்து மீள்விக்கப்பட்டது