பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எஸ்.டி. சுந்தரம்

191



ஏதேது. ஆசாமி பேசும் ஸ்டைலைப் பார்த்தால், சினிமா பாஷையாக இருக்கிறதே என்று உற்சாகம் அடைந்தேன்.

“எழுத்தாளர், டைரக்டர், கதாநாயகன் ஆகிய மூன்று பேரும் இறந்தால் கதாநாயகியும் புரொட்யூஸ்ரும் கூட. . .

சுவர்க்கத்துக்குத்தானே போயிருக்க வேண்டும்? நீர் சொல்லும் கதை, முன்னுக்குப் பின் முரணாக இருக்கிறதே! கதையில் விறுவிறுப்பு, கொஞ்சம் குறைகிறதே! ஒகோ! இப்போதுதான் உம்மைத் தெரிந்து கொண்டேன். மனுஷன் காலையில் வந்து ஏதோ சினிமாவுக்காக கதையைக் கற்பனை பண்ணுகிறீர். இல்லையா? தாராளமாகச் செய்யும், நானும் எனக்குத் தோன்றிய சில ஐடியா’க்களை சொல்லி வைக்கிறேன்” . .

இவ்வாறு கூறி என் பேச்சு வன்மையின் முதல் மூச்சைக் காட்டு முன்பே, அந்த மனிதரின் கண்களிலிருந்து தாரை தாரையாக நீர் வழிந்தது. அப்போது தான் எனக்குத் தெரிந்தது. எனது ஹாஸ்யப் பேச்சு அவரை அப்படி ஒரே அடியாக அழ வைத்து விட்டது என்று! என்ன செய்வது? சில பேருடைய நகைச்சுவை சரியான சோகரசத்தை உண்டாக்கிவிடும். கோபம் என்று வீராவேசம் பேசினால், சரியான ஒன்னாம் நம்பர் சிரிப்பாக முடியும். நம் பேச்சும் இப்படி ஒரு சுவை மயக்கமாகவே அமைந்தது போலும்,

தழுதழுத்த குரலில் தடுமாறிப் பேசினார் அவர், “என்னைக் கொஞ்சங்கூடத் தெரிந்து கொள்ளாமல் நையாண்டி செய்து விட்டீர்கள்:” -

“நான் வேதனையிலே வெம்பிப்போன வெள்ளரிப் பழம் சார். சோதனைக்கல்லால் தாக்குண்ட சுரக்காய் சார்! பாதகப்பாகில் ஊறிய பாதாம் அல்வா! நீரில்லாத ஆறு மோரில்லாத சோறு ஆவியில்லாத பாவி மேளமில்லாத தாளம் வாசல் இல்லாத பங்களா!” என்று சினிமாவில் வருவது போன்ற சோகவசனங்களைச் சொல்லி சுகமான நகைச்சுவை விருந்தை அள்ளி வீசினார் அந்த மனுஷர்.