பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எஸ்.டி. சுந்தரம்

197




இவ்வாறு கூறிப் பெருமூச்சு விட்டார் சோணாசலம். பிறகு, நிறுத்திய இடத்திலிருந்து மேலும் கதையைத் தொடர்ந்தார். - - . .

மறுநாள், ‘பிரபல எழுத்தாளர், பைத்தியக்காரச் சித்தன் தம் கடைசிப் படத்திற்கு வசனம் எழுதி முடிவுக்கு முன்பே காலமாகி விட்டார்’ என்ற செய்தியைக் கொண்டு வந்த ஸ்ரீமான் ஆசையார், “சார்! நல்ல மனிதர்கள் இறக்கும் போதுகூட பிறருக்காக ஒரு நன்மை செய்து விட்டே போகிறார்கள்! பாருங்கள். இப்போது நம் கதாசிரியர் சித்தன் காலமானதுகூட, நம் நன்மையை உத்தேசித்துத்தான். அவர் மரணம் நம் படத்தின் பண வசூலுக்கு ஒரு முக்கிய காரணமாகப் போகிறது. அவர் எழுதிய கடைசிப் படம் என்று விளம்பரம் செய்தால் அதற்காகவே தினம் ஆயிரம் பேர் வருவார்கள். எப்படி என் ஐடியா? என்று கேட்டார்.

டைரக்டர் உள்ளே வந்தார். எப்படியாவது காலஞ் சென்ற சித்தன் எழுதிய கற்பனைப்படியே கதையை எடுத்தால் தான் ஒடும். இல்லாவிட்டால் படம் படு தோல்வி யடையும் என்று ஒரே பிடிவாதமாகக் கூறினார் டைரக்டர்.

“டைரக்டர் சொல்லுகிறபடி கதையை எடுப்பதானால், நான் நடிக்க முடியாது” என்று கதாநாயகி ஒரே உறுதியாக ஒற்றைக் காலால் நின்றாள். அதோடு அவள் நிற்கவில்லை. “எனக்காகத் தான் கதையே தவிர, கதைக்காக நான் இல்லை” என்றும் உறுதியாகக் கூறிவிட்டாள்.

நான் என்ன செய்வது, இந்தப் பக்கம் டைரக்டர் விழிக்கிறார்; அந்தப் பக்கம் கதாநாயகி மிரட்டுகிறாள். இரண்டு ரேடியோவை ஏக காலத்தில் திருப்பியது போல, இருவரும் ஒருமணி நேரம் சரமாரியாக ஏதேதோ பேசிக் கொண்டார்கள்.

இருபதாயிரத்துக்கு வேலை செய்யும் டைரக்டரின் சொற்படி நடப்பதா அல்லது இரண்டு லட்சத்தை ஏப்பம் விட்டுவிட்டு, மூன்றாவது லட்சத்திற்கு மோப்பம் பிடிக்கும் நட்சத்திரத்தின் சொற்படி கேட்பதா? எனக்கு ஒன்றும்