பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எஸ்.டி. சுந்தரம்

27



இட்லி, இட்லி, இட்லி இட்லி
இட்லி என்று பாடுவோம்
சுற்றி நல்ல எண்ணை ஓட
சூட்டுடனே தள்ளுவோம்.

ம.பூ : போதும், போதும், போதும்! பேபி இட்லியைப்

பற்றி இவ்வளவு தூரம் புகழ்ந்து பாடிட்டு, நீ
ஏன் கருகிப் போன தோசை மாதிரி ரொம்ப
களைச்சுப் போயிருக்கே?

பேபி : ஆமாம், கொஞ்ச நாளாக அறிவுக்கு வேலை

மூளை கொதிப்பு! மண்டைக் கொழுப்பு! மன
நெருப்பு! எல்லாம் வெறுப்பு! எதுக்கு இந்தப்
பிறப்பு?

ம.பூ : இந்த வருஷம் பரீட்சையில் எல்லாப் பேப்பரும்

நல்லா எழுதியிருக்கியோ?

பூபதி : ஓ! எல்லாம் நல்லாத்தான் எழுதியிருப்பான்!

சொல்லேண்டா பேபி; தாத்தா கேட்கிறார்.

பேபி : உம், என்னமோ எழுதியிருக்கேன், ஆனால்...

ம.பூ : இந்த ஆனால் கீனால் என்று நீட்டிப் பேசுவதே

எனக்குப் பிடிக்காது. கச்சிதமாப் பேசணும்.
வாலிபனைப் போல தைரியமாப் பேசணும்.

வாணி : ஆமாம் பேபி! தாத்தாவிடம் இப்படியெல்லாம்

விளக்கெண்ணை மாதிரிப் பேசக்கூடாது.
தெளிவாக தைரியமா, கண்டிப்பா. கணக்காப் பேசணும்.

பேபி : கரெக்ட்... சரி... தாத்தா இந்த வருஷம் பாஸ்

பண்ண முடியாது தாத்தா.

ம.பூ : ஏன், ஏன், ஏன்?

பேபி : என் உடம்பு சரியாயில்லை. கணக்குப் பேப்பர்

அன்று கண் வலி! சைனஸ் பேப்பர் அன்று
ஜலதோஷம்! தமிழ் பேப்பர் அன்று தலைவலி!