பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

சிரிப்பதிகாரம்

காட்சி - 2

கண்டு) t

இடம் : புத்தர் கோட்டம் - அங்குள்ள தோட்டம் (சாந்தப் புன்னகை தவழும் புத்ததேவனின் பிரம்மாண்டமான சிலை - அணி விளக்குகள் அலங்காரமாக ஒளி வீசுகின்றன. புதிய மலர்கள் சூட்டப்பெற்ற பாத பீடிகை, அறவணர் முன்னிற்க, இருமருங்கிலும் பல பிட்சுக்களும், பிட்சுண்களும் பிரார்த்தனைக் கீதத்தைப் பாடுகின்றனர். பாட்டு முடிந்ததும், ஒருபுறம் கண்ணிரிலே தன் துயரைக் கழுவி நின்ற மாதவியைக்


அறவணர் மாதவித் தாயே! ஏன் மனக் கலக்கம், மாயை

மாதவி :

அறtெ

இருள் கடந்து மாதவ ஜோதியைக் காண வந்திருக்கும் உன்.கண்களைத் துன்பத்திரை மறைக்கக் கூடாது அம்மா! ஏன்? இங்கு உனக்கு என்ன குறை? கவலையின் காரணம்? என்னைப் பற்றி நான் கவலைப்படவில்லை அண்ணலே! என் மகள் மணிமேகலையின் வருங் கால வாழ்வு.

உன் மகள் மணிமேகலையா? நீ யார்? அவள் யார்? அவளைப் பற்றிக் கவலைப்பட உனக்கு அதிகாரம் ஏது? அவரவர் வினையின்படியே சுற்றும் விதி யின் சக்கரம்; அதன் வேகத்தின் படியே உயிர் களின் வாழ்வுப் பாதையும் அமையும். உலகமே அழுதாலும் விதி இரக்கம் காட்டாது. விதி விரட்டும்படி அவள் ஒரு குற்றமும் செய்ய வில்லையே தந்தையே, மணிமேகலை. அவள் எதிர்காலத்தின் அணையா விளக்கு? கண்ணகிதேவி கற்புக்கனலானாள். மணிமேகலை கன்னித் தெய்வமாக விளங்கப் போகிறாள். கண்ணகி புரட்சியின் பெருங்கடல்: