பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் ; - - 69

காட்சி - 4

இடம் : சாதுவன் வீடு (நகைகளைப் பெட்டியில் அடுக்கிக்கொண்டே)

சாதுவன் : தெரிந்துகொண்டேன்! மேகலா மேகலா! உன்னைக் கண்டதிலிருந்து காதலா இல்லாட்டா சாதலாங்கற கேள்வி எழுந்துவந்து என் எதிரிலே எமன் மாதிரி நிக்குது. சாதுவன் மனசிலே வேதனை அலைமோதுது. இதை நீ தான் சாந்தப்படுத்தணும். ஆகா நண்பா சாம்பிராணி!

சாம்பி : ஏம்பா நண்பா கற்பூரம்? சாது : என்னடா என்னை கற்பூரம்னு கூப்பிடுறே? சாம்பி : நீ ஏண்டா உன்னை சாம்பிராணி என்கிறே?

சாது : நீ சாம்பிராணி மாதிரி கருகிப் போயிக்கிட்டே

இருக்கே? - -

சாம்பி : நீ கூடத்தான் கற்பூரம் மாதிரிக் கரைஞ்சு போய்க்கிட்டே இருக்கே கற்பூரம் நெருப்பிலே எரியுது. நீ காமத் தீயிலே எரியறே!

சாது : காமம் முட்டாள் காதல் என்று கலையழகோடு பேசுடா ஆ நண்பா மணிமேகலை மோகனக் கலையின் காந்த மலை!

சாம்பி : ஐயோ... காந்தமலை ஆபத்து. அதுகிட்டே.

நெருங்காதே.

சாது : அவள் எந்த மலையானால் என்ன? நான் ஒரு இரும்புத் தலையன் நண்பா அவள் பெயரைச் சொன்னாலே பசி தீரும் நண்பா!