பக்கம்:சிறந்த சொற்பொழிவுகள்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜி. டி. நாயுடு 115

காண ஏதோ ஒருவகையான புண்ணியத்தைச் செய்ய வேண்டுமென்று எண்ணுகிறார்கள்.

காயத்திரி ஜபத்தைச் சொல்லுவதால் செலவில்லாமல் புண்ணியம் வந்து சேர்ந்து விடுவதாக எண்ணிக் கொண்டு காலத்தையும், சக்தியையும் வீண்செய்து கொண்டு வருகிறார்கள். காயத்திரி ஜபத்தை ஒரு ஏட்டில் எழுதிப் படித்தால் அதன் முழு விபரமும் தெரியவரும். அதாவது அது சூரிய உதயத்தைப் பார்த்துப் பாடப்பட்ட ஒர் பாடலாகும்.

சூரிய உதயத்தைக் கண்டு பறவைகள் பாடுகின்றன. மயில்கள் ஆடுகின்றன, உறங்கிக் கிடந்த உலகமே குதுகலத்தை அடைகிறது. சூரிய உதயமும் மறைவும் அழகிய காட்சிகளாகும். அவைகளைப் பார்த்து மகிழ்ச்சியடைந்து யாரோ ஒருவர் பாடி வைத்த பாடலைப் புண்ணியம் கொடுக்கும் மந்திரம் என்று நம்பிக்கொண்டு வருவதை மூடநம்பிக்கை எள்று சொல்லாமல் வேறு எவ்விதமாகச் சொல்லுவது! அதன் மூலம் எத்தனை பேர்கள் எந்தவிதமான நன்மைகளை அடைந்துள்ளார்கள் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா?

சாதாரண கல்லும், செம்பும், களிமண்ணும் விக்கிரகங்களாக மாறிவிட்டால், விசேடத் தகுதியைப் பெற்றுவிடுவதைப் போலவே சில சொற்களை மந்திரங்கள் என்று சொல்லுவதால் அவைகளும் பெரிய தகுதியை அடைந்துவிடுகின்றன. எல்லாம் ஏமாற்று வேலைகள். பகுத்தறிவைப் பயன்படுத்தாததால் ஏற்பட்ட இழிநிலைகளே மூடநம்பிக்கைகள். * . . . -

மூடநம்பிக்கைகளால் மனிதனுக்கு என்ன வசதிகள் ஏற்பட்டுள்ளன? உணவுப் பொருட்களின் உற்பத்தி அதிகரித்துள்ளதா? வைத்தியம், கல்வி, சுகாதார வசதி பெருகியுள்ளதா? நீங்களே எண்ணிப் பாருங்கள், சிந்தனை செய்யுங்கள். - - -

நல்ல நாளில், நல்ல நேரத்தில் ஆரம்பித்த எத்தனை காரியங்கள் தோல்வியுற்றுள்ளன? ராகு காலத்தில் செய்த எத்தனை காரியங்கள் வெற்றி பெற்றுள்ளன? இவைகளுக்கு ஏதாவது சரியான கணக்கு உண்டா? பஞ்சாங்கத்தில் ராகு காலம், குளிகை காலம், பல்லி விழும் பலன் ஆகியவைகளை எழுதி வைத்திருக்கிறார்கள். அவைகளைப் பார்த்து அதன்படி நடந்து எத்தனை பேர்கள் முன்னேறி உள்ளார்கள்? அவைகளை நம்பாமல் தம் உழைப்பை மாத்திரமே நம்பி காரியங்களைச் செய்பவர்கள் எத்தனை பேர்கள் தோல்வி அடைந்துவிட்டார்கள்?