பக்கம்:சிறந்த சொற்பொழிவுகள்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 சிறந்த சொற்பொழிவுகள்

ஒரே நேரத்தில், மிகவும் நல்ல நேரத்தில், ஏழை வீட்டில் ஒரு குழந்தையும், பணக்காரன் வீட்டில் ஒரு குழந்தையும் பிறக்கிறது. இரண்டு குழந்தைகளும் ஒரே நேரத்தில் பிறந்து இருந்தும், ஒன்று வறுமையில் வாடுகின்றது, மற்றொன்று செல்வத்தில் வளருகின்றது. இது ஏன்? இவைகளைப் பற்றி எல்லாம் எண்ணிப் பார்த்தால் தெரியும் நாம் எவ்வளவு மூடப் பழக்க வழக்கங்களால் கெட்டுப் போய்க் கொண்டிருக்கிறோம் என்று!

ஏன் இவைகளை எல்லாம் நினைத்துக்கூடப் பார்ப்பதில்லை? கண்களை மூடிக்கொண்டு பழைமையை நம்புவதுதான் காரணம்.

சோதிடத்தின் முக்கிய கருத்து என்னவென்றால், சில நட்சத்திரங்களின் போக்கை யொட்டி மனிதனின் வாழ்க்கையும் மாறுபடுகிறது என்று சொல்லுகிறார்கள். வானத்தில் உள்ள நட்சத்திரங்களுக்கும், மனிதனுடைய வாழ்க்கைக்கும் எவ்விதமான தொடர்பும் கிடையாது. சோதிடம் பயின்று சோதிடம் சொல்லிக் கொண்டிருப்பவர்களுக்கே அவர்களுடைய எதிர்காலத்தில் நடக்கப்போவது என்னவென்று தெரியாது. அவர்களுடைய எதிர்காலம் எப்படி இருக்குமென்று தெரியாதவர்கள் பிறருடைய எதிர்காலம் பற்றிச் சொல்லிக் கொண்டிருப்பது மிகவும் வியப்பாக இருக்கிறது.

சோதிடம் பார்ப்பதும் ஒர் மூடநம்பிக்கைதான். எதிர்காலத்தில் என்ன நடக்கப் போகிறது என்று தெரிந்து சொல்லும் சக்தி இருந்தால், சோதிடம் சொல்லுபவர்களே குதிரைப் பந்தயம், லாட்டரி போன்றவைகளில் கலந்து கொண்டு லட்சக் கணக்கில் சம்பாதிக்கலாமே! ஏன் வருபவரிடம் நான்கு அனாவை எதிர்பார்த்து வாழ்க்கையை நடத்த வேண்டும்? மக்களின் மூட நம்பிக்கையைப் பயன்படுத்திச் சிலர் வயிறு வளர்க்கச் செய்துகொண்ட வழியாகும் இது. - * ・ ・ ・ベ

சகுனம் பார்ப்பதும் ஒரு வகையான மூட நம்பிக்கைதான். ஒற்றைப் பார்ப்பான், விதவை, குருடன், முடவன், நோயாளி, எண்ணெய் வியாபாரி ஆகியவர்கள் எதிர்ப்பட்டால் கெட்ட சகுனம் என்று நம்புகிறார்கள். இவைகள் எப்படிக் கெட்ட சகுனமாகும்? மேலே கூறியவர்கள் எதிர்ப்பட்டு எத்தனை பேர்களுக்கு எத்தனை காரியங்கள் கெட்டுப்போய் இருக்கின்றன? இவைகளை எல்லாம் யாராவது பரீட்சை செய்து ஆதார பூர்வமான முடிவை வெளியிட்டுள்ளார்களா? - . -- • * x

ஒற்றைப் பார்ப்பானை நமக்குத் தெரியாமல் எத்தனை தடவை சந்திக்கிறோம். பிராமணர் வசித்துவரும் தெருவில் ஒற்றைப் பார்ப்பான்