பக்கம்:சிறந்த சொற்பொழிவுகள்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜி. டி. நாயுடு 117

எதிர்ப்படுவது சர்வ சாதாரணம். இதைப் பற்றி எந்தப் பார்ப்பானும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. நம்மவர்கள்தாம் கெட்ட சகுனம் என்று சொல்லிக்கொண்டு மனத்தைக் கெடுத்துக்கொண்டு வருத்தப் படுகிறார்கள். மற்றும் மூன்று பிராமணர்கள் எதிர்ப்பட்டால் நல்ல சகுனமாம். ஒருவர் எதிர்ப்பட்டால் கெடுதல் என்றால், மூன்று பேர்கள் எதிர்ப்பட்டால் எப்படி நல்லதாகும்? அதிகக் கெடுதல் அல்லவா ஏற்பட வேண்டும்? ஏன் அப்படிச் சொல்லுவதில்லை!

விதவை எதிர்ப்பட்டால் ஏன் கேடு வரும் என்பதை யாரும் விசாாரிப்பதில்லை. விதவை எதிர்ப்பட்ட தினம் எல்லாம் கேடு விளைகின்றதா? எத்தனை தடவை கேடுகள் விளைந்தன? விதவை என்பதும் சுமங்கலி என்பதும் நாம் வைத்த பெயர்கள்தாமே! பெயர் வித்தியாசத்தால் கேடும், நன்மையும் எப்படி வரும்?

இன்று விதவையாக இருப்பவள் நாளையே சுமங்கலியாக மாறிவிடலாம். விதவை, சுமங்கலி என்பது வெறும் வழக்கச் சொற்கள் தாமே ! சுமங்கலி எதிர்ப்பட்ட போதெல்லாம் நல்லதே நடந்ததென்று யாராவது நிரூபித்துள்ளார்களா? வெறும் சொற்களை நம்பி நம்மை நாமே மோசடி செய்துகொள்வானேன்? இத்தனைக்கும் காரணம் சகுனங்களால் நன்மை தீமைகள் விளைவதாக எண்ணிக்கொண்டிருக்கும் மூடநம்பிக்கைதான். பல்லாண்டுகளாக நம் மக்கள் மூடநம்பிக்கையிலேயே மூழ்கிக் கிடப்பதால்தான் நம் நாட்டில் விஞ்ஞானம் வளர்ச்சியடையவில்லை. மூடப் பழக்கங்கள் ஒழிந்தால்தான் விஞ்ஞான அறிவு வளர்ச்சியடையும்.

கடவுளை நம்புவதும், கும்பிடுவதும்கூட )ـا للان நம்பிக்கைதான். கடவுளை நம்பிக்கொண்டிருப்பவர்கள் எத்தனை பேர்கள் உண்ண உணவு இன்றி உடுக்க உடையுமில்லாமல் தெருத் தெருவாகத் திரிவதைக் காண்கிறோம். இது போலவே கடவுளைப் பற்றியே ஒரு சிறிதும்கூட நினைத்துப் பார்க்காதவர்கள் எவ்வளவோ தூரம் முன்னேறிச் சீரும் சிறப்புமாக வாழ்வதை நாம் காண்பதில்லையா? உதாரணத்துக்குப் பெரியார் ஈ.வெ.ரா. அவர்களையே சொல்லலாம்.

கடவுள் இருக்கிறார் என்று ஒருவர்கூட நிரூபித்துக் காட்டவில்லை. கடவுள் உண்மையிலேயே இருப்பதாக இருந்தால், அவர் வசித்து வரும் கோவில்களையாவது காப்பாற்ற முயற்சி செய்திருப்பார். சமீபத்தில் குருவாயூர் கோவில் முழுவதுமே தீப்பற்றி எரிந்து சாம்பலானது. அங்கு