பக்கம்:சிறந்த வாழ்வுக்குச் சில யோசனைகள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

சிறந்த வாழ்வுக்குச் சில சிந்தனைகள்

கேட்கவோ தேவை ஏற்படாது. இந்தப் பிறவியில் நீ துன்பமடைய வேண்டியிருக்காது. ஏன், நீ எத்தனைப் பிறவி எடுத்தாலும் உனக்கு எந்தக் கவலையும் ஏற்படாது.

அறிவிலியாக இருப்பவன் நாவடக்கம் இல்லாதவன். தன் விருப்பப்படி எதை வேண்டு மானாலும் பேசுவான். அவனுடைய பேச்சு அவனுடைய முட்டாள் தன்மையையே வெளிப்படுத்தும்.

திடீர் என்று எதையும் செய்திடத் துணிபவன், விரைந்து விரைந்து ஒடி, வேலியைத் தாண்டி, பள்ளத்தில் விழுபவனுக்குச் சமமானவன். விளைவுகளைப் பற்றி எவன் ஒருவன் முன் கடட்டியே எண்ணாமல் செயல்படுகிறானோ அவன் சட்டத்திற்குப் பணிந்து விடை கூற நேரிடும்.

எனவே எதிலும், தீவிரச் சிந்தனை செய்த பின்னரே முடிவை மேற்கொள்ள வேண்டும்.

அடக்கம்

மனிதனே! நீ யார் என்பதைத் தெரிந்து. கொள்! நீ எல்லாம் அறிந்தவன் என்று நீயே நினைத்துக் கொள்ளாதே.

முதலில் நீ அறியாமையோடுதான் பிறவி எடுத்தாய் என்பதை மறந்து விடாதே. அதுமட்டு-