த. கோவேந்தன்
21
எப்போதும் அழிவே இல்லாத இயற்கைதான் இந்த உலகத்தில் நீ எங்கிருந்து, என்ன செய்ய வேண்டும் என்பதைக் கணித்திருக்கிறது.
இயற்கைத் தாய் உன்னை நன்கு புரிந்து கொண்டவள். உன் நெஞ்சத்தின் துடிப்பை அறிந்தவள். உன் ஆரவாரத்தையும், தற்பெருமையும் என்ன என்பதை உணர்ந்திருப்பவள். உன் கோரிக்கைகளில் பலவற்றை நிறைவேற்றிட உதவி புரிபவள் அவள்.
அதே நேரத்தில் உன்னுடைய முறையான கோரிககைகளை ஏற்று நிறைவேற்றுபவளும் அவள் தான். நீ நேர்மையுடன் பாடுபட்டதற்கு, நல்ல பலனையும் தந்தவள் அவள்தான்.
இன்று நீ அமைதியற்று நுகரும் ஏமாற்றங்களுக்கும், தோல்விக்கும், துயரத்திற்கும் என்ன காரணம் என்பதை எண்ணிப்பார். எதனால் இந்த நிலை யாரால் இந்த நிலை எல்லாம் உன் தவறு தானே. உன் அகந்தைதானே காரணம். உன் அறிவைச் சீராகப் பயன்படுத்தாததின் விளைவு தானே இவை எல்லாம்.
இயற்கை உனக்கு அருள் புரியவில்லை என்று முணுமுணுக்காதே. உன்னையே நீ முதலில் திருத்திக்கொள். பணத்தின் மீதோ அதிகாரத்தின் மீதோ பற்றுக் கொண்டு, எனக்கும் செல்வம் இருந்திருந்தால்-என் கையிலும் அதிகாரம் இருந்திருந்தால் நானும் மகிழ்ச்சியாக வாழ்ந்திருப்பேன் என்று