உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிறந்த வாழ்வுக்குச் சில யோசனைகள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

சிறந்த வாழ்வுக்குச் சில சிந்தனைகள்


மயங்கிவிடாதே. ஆர்வ மொழிகளுக்குச் செவிமடுக்காதே. அவளின் கண்கள் வலைவீசி விட்டால் நீ அடிமையாகி விடுவாய்.

உனக்கு மானக்கேடு ஏற்படும்; பிணிக்குப் பலியாகிவிடுவாய். நடந்ததை எல்லாம் நினைத்து வருந்தவேண்டி இருக்கும்.

ஆரவாரப் பெருவாழ்வு உன் உடல் உறுப்புகளைக் குறைத்து, உடல் நலத்தைப் பாதித்து, உன் வாழ்நாள்களைச் சுருக்கிவிடும். பல துன்பத்தை அடைவாய். உனக்கு யாரும் ஆறுதலாக இருக்க மாட்டார்கள்.

நம்பிக்கையும்-அச்சமும்

நம்பிக்கையூட்டும் உறுதி மொழிகள் மலர்ந்த செம்மலர்களைப் போல இனிமையாக இருக்கும். ஆனால் அந்தச் செம்மலர்கள் அச்சம் எனும் முட்கிளையில் பிணைந்துள்ளன.

நம்பிக்கையில் மயங்கிவிடாதே. அச்சத்தின் காரணமாகத் தயக்கம் அடைந்து விடாதே. எதைச் செய்வது முறையோ அதைச் செய்யத் தயங்காதே. வாழ்க்கையில் குறுக்கிடும் எல்லாச் செயல்களிலும் ஒரே முறையில் தெளிவாக அணுகிச் செயல்படு.

நல்லவர்களுக்கு இறப்பு கூட அச்சமடையச் செய்யாது.