32
சிறந்த வாழ்வுக்குச் சில சிந்தனைகள்
விடும். இப்படி நீ நடந்து கொண்டால் உன்னைப் பகைவனாக நினைப்பவன் கூட உன் உற்ற நண்பனாகி விடுவான்.
சினத்தின் மூலம் எதையும் பெரிதாகப் பெற்று விட முடியாது. அறிவற்றவர்களே அதிகமாக ஆத்திரப்படுவார்கள்.
சினத்தின் தொடக்கமே தவறானது. உள்ளக் குறைபாட்டின் விளைவே சினம். பெரும்பாலும் சினம் உன்னைப் பிறரிடம் மன்னிப்புக் கோரவே செய்யும். சினம் வந்தால் அதன் பின் துன்பம் தொடரும்.
இரக்கம்
இளவேனிற் காலத்தின் மரங்கள் மலர்ந்த மலர்களைப் பறித்து நிலத்தின்மீது வீசுவது போலகோடையின் அன்பால் நல்ல அறுவடையை மக்கள் அடைவது போல-இரக்கத்துடன் புரிந்திடும் புன்னகையே, நலிந்து தவிக்கும் மக்களுக்கு நன்மை தரும்.
எவன் ஒருவன் இரக்க குணம் கொண்டு பிறரிடம் பழகுகிறானோ, அவன் தன்னை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்திக் கொள்கிறான்.
இறைச்சிக் கடைக்காரன் ஆட்டுக் குட்டிகள் குரலைப் பொருட்படுத்துவதில்லை. அதைப் போலவே கல் நெஞ்சம் கொண்டவர்கள்