உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிறந்த வாழ்வுக்குச் சில யோசனைகள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

சிறந்த வாழ்வுக்குச் சில சிந்தனைகள்



ஆசையும் காதலும்

இளைஞனே! விலைமாதிடம் எச்சரிக்கையாக இரு. அவள் உன்னை அடைய கவர்ச்சியைக் காட்டுவாள். ஆசைகளைத் தூண்டுவாள். இன்பம் நுகர மயக்கமூட்டிப் பழகுவாள். நீ அறிவு கெட்டு மயங்கி விட்டால் உன் அழிவை நீயே தேடிக் கொள்வாய்.

எனவே, அவளுடைய ஏமாற்றத்திற்குப் பலியாகி விடாதே. உன் உள்ளத்தைப் பறிகொடுத்துத் தவிக்காதே.

உனக்கு மகிழ்ச்சியைத் தரவேண்டிய உடல் நலம் படிப்படியாகக் குறைந்து வற்றிவிடும். இளமைக் கோலம் மறைந்து இளைய வயதிலேயே கிழவனாகி விடுவாய்

ஒழுக்கமும் நல்ல நடத்தையும் உள்ள பெண்ணின் நிலை விலைமகளைப் போன்றதில்லை. அவள் அல்லி மலர் போன்று தூய்மையானவள். அவள் சிரிப்பில் செம்மலர் பூத்திடும். அவளுடைய கண்கள் இரு சுடர் போலக் களங்கமற்று காணப்படும். அவளிடம் எளிமை இருக்கும். உண்மை இருக்கும். அவள் முத்தத்தில் தேனின் இளமை இருக்கும். அவளின் உதடுகளில் நறுமணம் வீசும். அப்படிப்பட்டவளிடம் உன் அன்பைச் செலுத்து. உன் மனத்திற்கு இன்பம் ஏற்படும். எல்லா நன்மைகளையும் பெற்று ஏமுற்று வாழ்ந்திடுவாய்.