பக்கம்:சிறந்த வாழ்வுக்குச் சில யோசனைகள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

சிறந்த வாழ்வுக்குச் சில சிந்தனைகள்

யும் கண்டு களிக்கும்போது நீ அவனிடம் உள்ளத் தூய்மையுடன் நடந்து கொள்ள வேண்டும். அவனுக்கு இரண்டகம் நினைக்காதே. அவனின் வாழ்வைக் கெடுத்துக் கைவிட்டு விடாதே.

உள்ளத் தூய்மை படைத்தவன் ஏமாற்றவோ, போலியாக வஞ்சக நாடகம் ஆடமாட்டான். அவன் பொய்களை நம்பமாட்டான். எப்போது உண்மையைப் பேசுவான். அவன் மனிதனாக வாழ்வான். மனிதனுக்கு உரிய நற்குணங்கள், அவனிடம் குடி கொண்டிருக்கும். பகல்வேடக்கார னாக இருக்க மாட்டான். அவன் தன்னம்பிக்கை. கொண்டவன். இன்னல்களைக் கண்டு அஞ்ச மாட்டான். உண்மையைக் கடற அஞ்சமாட்டான். பொய் பேச அச்சப்படுவான்.

பேச்சில் எச்சரிக்கையாக இருப்பான். எது சரி, எது சரியில்லை என்பதைத் சிந்தித்துப் பேசுவான்.

எல்லோருக்கும் நட்புறவுடன் நல்ல அறிவுரைகள் கூறுவான். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவான்.

பகல் வேடம் போடும் வஞ்சக வேடதாரி எதையும் மறைத்தே வைத்திருப்பான். எதையும் இட்டுக்கட்டி உண்மையாகக் காட்டி விடுவான். ஏமாற்றுவதே குறியாகக் கொண்டிருப்பான்.

துன்பத்துடன் சிரிக்கவும், இன்பத்துடன் அழவும், உண்மை ஏதும் இல்லாத சொற்களைப் பேசியும் வாழ்வான்.