பக்கம்:சிறந்த வாழ்வுக்குச் சில யோசனைகள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

61

இருட்டில்தான் அவன் செயல்கள் இருக்கும். வெளிச்சத்தில் தவறுகள் புரிவான். தான் நிறைவுடன் பாதுகாப்பாக இருப்பதாக நினைப்பான். ஆனால் அவன் எப்படிப்பட்டவன் என்பதே வெளிப்பட்டே தீரும். அவன் நெஞ்சத்திற்கும் பேச்சுக்கும் தொடர்பு இருக்காது. நல்லவனாகக் காட்டிக் கொள்வான். ஆனால் தந்திரமாகவே எதையும் செய்வான்.

அவன் ஒரு முட்டாள். முழு மூடன். அவன் மறைத்துப் போலி வேடம் போட்டாலும் அவன் யார், எப்படிப்பட்டவன் என்பது அறிவுள்ளவர் களுக்கு வெளிப்படையாகிவிடும். கேலிக்கு உரியவன் ஆவான். அவன் போட்ட வேடம் கலைந்துவிடும். எப்போதும் அவனைக் காணவே விரும்பாமல் வெறுத்து ஒதுக்கி வைக்கப்படுவான்.

இயற்கை

இயற்கை ஒன்றே உயிர்ப்பாற்றல் உடையது.

அதுவே படைப்பது. உலகத்தை ஆண்டிடும் எல்லாம் வல்லது; என்றும் நிலைத்திருப்பது; எவர் கண்ணுக்கும் புலப்படுத்துவது.

ஞாயிறு உலகத்திற்கு ஒளி தருவது உண்மை என்றாலும், ஞாயிறு கடவுள் அன்று. செங்கதிர் தான் உலகத்திற்கு வெப்பத்தை தருகிறது என்பது உண்மை. அதற்காக மகிழ்ச்சி கொள். ஆனால்,