பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்றுமில்லை. சுவரில் ஒடும் பல்லியைப் பிடிக்க பூனை ஒன்று அங்கும் இங்கும் தாவிக் கொண்டிருந்தது. சாதாரண சொற் பிரயோகங் களும், சேட்ட்ைகளும் ஹாஸ்யமாகத் தலைமீது வைத்துக் கொண்ட்ாடக்கூடிய காலத்தில் இருக் கிருேம் என்பது எனக்கு அடிக்கடி மறந்து விடுகிறது.

பாமா உதட்டுச்சாயம் பூசி, மேலும் கண் இரப்பைகளுக்கு மைதீட்டி முடித்து நிமிர்ந்த வுடன் நான் திடுக்கிட்டேன். அனந்துவுக்கும், அன்னலகஷ்மிக்கும் ஏற்ற மருமகள்தான் இவர் என்பதுதான்் என் திகைப்புக்குக் காரணம், நாடக அரங்கின் க்ரின் ரூமில் வேஷம் பூசும் நடிகையின் தோற்றத்தில் இருந்தாள் அந்தப் பெண். ரங்கனும் பெரிதும் மாறியிருந்தான்். காதுப் புறங்களில் சுருண்டு இறங்கும் கிருதா வும், மேலும் அழகு படுத்திய மீதையுமாக அவனும் முகத்துக்கு ஒப்பனை செய்துக்கொண் டிருந்தான்். மீசை வைத்து, கிராப்பு வைத்து பெண் பிள்ளைக்கு ஆண் வேஷம் போட்டாற் போன்ற தோற்றம்.

இந்தக் காலத்து ஆண்கள் பெரும்பாலும் விரும்பும் தோற்றமும்கூட.

அனந்து வெகுநேரம் திரும்பவில்லே. மகனேயும், மருமகளேயும் சேர்த்து உட்கார

வைத்து அன்னலகஷ்மி கூடத்தில் உணவு பரி மாறும் சாட்சியையும் கண்டேன்.

"இந்தக் கூட்டு எங்கம்மா சமையலேப் போல இருக்கு-இதுக்குக் கொஞ்சம் உறைப்பு கொஞ்சமாப்போட்டிருக்கணும் இல்லையா? நீங்க என்ன சொல்றேள்?' என்று பாமா என் செவி களில் அறைவது போல் இரைந்து பேசிள்ை.

அன்னலக மியின் மிருதுவான குரல் விணே யின் நாதம் போல் அந்த வீட்டில் வெள்ளிக் கிழமைகளில் சியாமளா தண்டகத்தைப் பாடிக் கேட்டவன் நான். எத்தனே நாட்களாகக் கேட்டு வருகிறேன்: பதினேந்து ஆண் டு க ளா க. அலுக்குமா எனக்கு ? இன்னமும் கேட்பேன். தெய்வீக உருவங்கள் நிறைந்த ஒரு சிற்பக் கூடத்தில் கட்ட நடுவில் பேயின் சிலேயை வைத்தாற்போல் அந்த வீட்டுக்கு வந்திருக்கும் மருமகள் எனக்குத் தோன்றினுள்.

இடை இடையே நான் வெளியூருக்குச் சென்றுவிடுவேன். வாசலில் வெளியில் ரிங்கன்ப் பார்த்து எப்போதாவது பேசினல் அவன் ஏதோ விமானத்தில் வந்து இறங்கியதுபோல், ஐ...n!

தட் இஸ்குட்” என்று பேசி வந்தான்். அந்தப் பெண் இணும் அடிக்கடி, "ஒ. ஸில்லி! நான் கேட்டை (Cat) டச் பண்ணிட்டேன். கை

ஆலம்பனும்...' என்று தன் ஆங்கில அறிவை வெளிப்படு த்திக் கொண்டிருந்தாள்.

ரங்கனுக்கும், பாமாவுக்கும் அந்த ஊர் பிடிக்கவில்லே.

சே! ஊரா இது? ஒரு நல்ல தியேட்டர் உண்டா? ஊரிலே எங்கே திரும்பினுலும் கோயில்

சுவத்திலே போய் முட்டிக்க வேண்டியிருக்கு,

பம்பாப் போயிடப்போறேன்-' என்ருள்

அவள்.

"பம்பாயிலேயும் கோயில்கள் உண்.ே

ரங்கா-' i.

பம்பாயிலே நைட்கிளப்பும் உண்டு-”

என்று இரைந்து சிரித்தாள் பாமா.

அந்ைது என்னிடம் யோசனை கேட்க அடிக் கடி வரமாட்டார். புது மருமகள் வந்த புத்து தினங்களுக்கப்புறம் அவர் 'வாசு ஒண்னு அந்தப் பெண்ணும், அவனும் இங்கே இருக்கட் டும். நானும், இவளும் எங்கானும் போயிடருேம். இல்லே, இவன் பம்பாய்ப் போகனும். அமைதியா, ஆனந்தமா வாழ எனக்கு ஆசை. இப்படி கூச்சல் ப்ோட்டுக்கொண்டு, எப்போதும் தன்ன்ச் சுற்றி சத்தம் வந்து கொண்டிருக்கிறதே ஒரு நாகரீகம்னு கெனச்சுண்டு இருக்கிறவா ளோடே எங்களால் இருக்க முடியலே-'

ஊரிலே காலா பக்கமும் அலறுகிற ஒலி பெருக்கு மாதிரி, வீடுகளிலும் சத்தமும், கூச் சலும் ஆரம்பமாகிவிட்ட காலம் இது.

"கொஞ்சம் பொறுமையா இருங்கோ சார்...காலம் படுவேகமாய் முன்னேறி இருக்கு. எதையும் சத்தம் போடாமச் செய்யற பழக்கமே நம்மை விட்டுப் போயிடித்து. இந்தக்காலத்துலே நீங்க ஒரு தனி ரகம். அனந்து சிறிது நேரம் உட்கார்ந்திருந்துவிட்டு மேஜைமீது இருந்த தண்ணிர்க் கூஜாவிலிருந்து நீரெடுத்து மடக மடக்கென்று குடித்தார். ஏதோ வேண்டாத எண்ணங்களே முழுங்கித் தொலைக்கிருர் என்பது மட்டும் எனக்குப் புரிந்தது. i

அந்த நாள் எதிர்விடு அமர்க்களப்பட்டுக் கொண்டிருந்தது. பம்பாப் ஜனதாவில் சங்கனும், அவன் மனைவியும் பிரயாணமாகிருர்கள் போலும். மருமகள் உரத்தகுரலில், "அம்மா! பூரி, உருக்ளக்கிழங்கு, ராத்திரி சாப்பாட்டுக்கு. நாக்ாக்குத் தயிர்சாதம். நிறைய பாலேவிட்டுப்

பிசையுங்கோ. புளிக்காது. புளிச்சாலும் ஜலம் விட்டுக்கலாம். நடுவிலே திங்க ஒமப்பெ ாடி, வேர்க்கடலே உருண்டை..."என்று உத்தரவு

போட்டுக்கொண்டிருந்தாள்.

வாசலில் வண்டி வந்து நின்றது.

பம்பாய்க்கு வாங்கோ-அப்படியே பஞ்ச வடி, நாசிக் போயிட்டு வரலாம்-' பாமாவின் அன்பான அழைப்பு மாமர்ை --- மாமியாருக்கு, பஞ்சவடியும், நாசிக்கும் இந்தச் சத்தத்தைத் தாங்குமோ?

பொல்லென்று அதற்கடுத்த மாகிறது.

மழைத்தாரைபோல் என் செவிகளில் திருப் பாவை வந்து பாய்கிறது.

நாள் உதய

அந்த விட்டில் மறுபடியும் அ ைமதி

அரசோச்சுகிறது.