பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளையில் இரண்டு தேன் கூடுகள் கட்டி

-- இருப்பதிைக் கண்டா ள் அவள்.

விடியற்காலம் சூரிய உதயத்துக்கு முன்பே தர்மாம்பாள் கொல்லப் பக்கம் வரும்போது அந்த அழகிய காட்சியைப் பார்த்திருக்கிருள். 'உய்ய்' என்கிற ரீங்காரத்துடன் கூட்டமாகத் தேனிக்கள் அங்கும் இங்கும் பறந்து சென்று மலர்களி

லிருந்து தேனைக் கொண்டு வந்து சேர்ப்

பதைப் பார்த்து அப்படியே தன்னை மறந்து நிற்பாள் அவள். அந்த வீட்டிலே உணவுப் பஞ்சமே தவிர, மலர்களுக்குப் பஞ்சமில்லை. கொய் யா மரத்துக்கு அப்பால் மல்லிகைச் செடி புதர்போல் மண்டிக் கிடந்தது. கொத்துக் கொத் தாய் மலர்களைத் தாங்கி மருதோன்றி மரங்கள் வேலி போட்டாற் போல் வரிசையாக இருந்தன. துளசியும், சாமந்தியும் கிணற்றைச் சுற்றி வளர்ந் திருந்தன. ஒரு மூலையில் சரக்கொன்றை மரம் சரம் சரமாக மலர்களேச் சொரிந்து கொண்டு நின்றது. அவர்கள் வீட்டுப் பெண் குழந்தைகள் வயிற்றுக்கு இல்லாவிட் டாலும் தலை நிறையப் பூ வைத்துக் கொண்டு பள்ளிக்கூடம் போவார் கள். பூஜை அறையில் "கம் மென்று மலர்க ளின் மன ம் வீ சிக்

Zost T]] リ傘琴

-

கொண்டே இருக்கும். வறுமை என்னும் கொடிய நோயில் அவர்களேச் சிக்க வைத்து வேடிக்கை பார்க்கும் முருக வேளின் படத்துக்கு மல்லிமாலை போட்ா மல் இருக்க மாட்டாள் தர்மாம்பாள்.

அமாவாசைக்கு முன்பு தேன் கூடுகள் பருத்து, அதனுள் தேன் நிறைய இருப்

பது தெரியும். மாலைக் கதிரவனின் ஒளி அக்கூடுகளைத் தங்க நிறமாக மாற்றித் தரும். அமாவாசை நெருங்கி வரும் போது அந்த ஈக்கள் தேனை உறிஞ்சி விட்டுத் தோட்டத்தைச் சுற்றிச் சுற்றி ரீங்காரமிட்டுக் கொண்டே திரிவதையும் தர்மாம்பாள் பார்த்திருக்கிருள்.

சமீபத்தில் கச்சபேசுவரன் அவர்க ளுடைய வீட்டுக்கு வத்திருந்தார். கொல் லேப்புறம் சென்றவர் தேன் கூடுகளைப் பார்த்து அதிசயித்து நின்றார்.

'ஏகாம்பரம் இதென்னப்பா இது? வீட்டிலே தேன் கூடு கட்டக் கூடாதே. யாரையாவது குறவனே அழைத்து வந்து கலைத்துப் போடச் சொல்லப்பா. . . . சுவாமிக்கும் அபிஷேகத்துக்குத் தேன் ஆச்சு. மருந்துப் பண்டம் வேறு. இந்த மாதிரி சுத்தமான தேன் கிடைக்காது. கைச் செலவுக்கும் ஏதாவது கிடைக் கும்...' என்று கூறினர், மரத்தை அண்ணுந்து பார்த்துக் கொண்டே.

தர்மாம்பாள் உள்ளேயிருந்து எட்டிப் பார்த்தாள். 'அன்றலர்ந்த மலர்களி லிருந்து தேனை எடுத்து வந்து சேகரித்து உண்ணும் அந்தத் தேனிக்கள் நம்மை என்ன செய்கின்றன ? யாருடைய பொருளையாவது அபகரித்துக் கொண் டனவா ? நாம் இருக்கும் வீட்டில் வந்து நமக்குத் தொல்லே தருகின்றனவா ? இயற்கையில் பிறந்து இயற்கையாக வாழ்ந்து அப்படியே மடியப் போகும் அவைகளின் அமைதி யான வாழ்க்கையை நாம் ஏன் கலைக்க வேண்டும்? தொல்லை தரவேண்டும்?' என்று தர்மாம் பாள் சிந்தித்தாள். அத்துடன் அவளுக்கு ஒரு பயம். அடுத்த வீட்டிலே சில மாதங்களுக்கு முன்பு குருவிக் கூட்டைக்கலைத் தார்கள். பறக்கத் தெரியாத சிறு குஞ்சுகள் இரண்டு : நாலேந்து முட்டைகள். அவை களைப் பேணி வள ர் க் கும் ஆணும், பெண்ணும் கலந்த அந்தக் கூட்டைப் பார்த்துக் கத்திய கத்தல் .ெ சா ல் லி முடியாது. "குழந்தை குட்டி களுடன் வாழும் ஆறறிவு படைத்த மனிதா ! உன்னு டையதுதான்் குடும்பமா? என்

னுடையதும் குடும்பம்தான்் ! இதோ பார் ! கருவிலே வ ள ரு ம் உயிர் கள்' என்று சொல்லாமற் சொல்வி

முட்டைகளின் அருகில் வந்து கத்தின.

"இதோ பார்! உன்னுடைய குழந்தை களேப் போல் என்னுடைய குழந்தை களும் !" என்று பறக்கத் தெரியாமல்