பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நானும், ராஜியும் மயிலையில் கபாலீசுவரர் கற்பகாம்பாளேத் தரிசனம் செய்துவிட்டுத் திரும் பிக் கொண்டிருந்தோம். பன்னிரண்டு ஏ-நம்பர் பஸ்ஸில் குளத்தங்கரையில் ஏறினவர்கள் அபிராம புரம் தாண்டும் வரை பேசவில்லே. தெருவில் நிகழும் சம்பவங்கள், ஒடும் வாகனங்கள், வரிசை வரிசையாக நிற்கும் பெரிய பங்களாக்கள் எதுவுமே என் கவனத்தை ஈர்க்கவில்லை. இவைகளுக்கெல் லாம் மேலாகக் கற்பகாம்பிகையின் தெய்விக அருள் நோக்கின் நெகிழ்ச்சியில் என் உள்ளத்தில் ஏதோ ஒன்று நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. 'ஆனந்தமா, திருப்தியா? எது என்று என்னுல் விண்டு சொல்ல முடியவில்லே.

ராஜி திடிரென்று பேச ஆரம்பித்தாள். 'ரொம்ப நேரம் ஆகிவிட்டது. மாம்பலத்தில் பாலு வீட்டில் போய்ச் சாப்பிட்டு விடுவோம்... என்ன?' என்று கேட்டாள் என்னிடம்.

நெற்றியெங்கும் கவிந்திருந்த நரைத்த கூந்த வின் நடுவே பளிச்சென்று குங்குமம் துவங்கியது. வகிட்டில்கூடத்தான்். ராஜி என்னைவிட ஐந்தாறு வயது மூத்தவள். வாழ்க்கையின் ஆரம்பத்தில் நானும், அவளும் அரிச்சுவடி பயில் ஒன்ருக நடை பயின்றவர்கள். காலேஜ் கிலேஜ் என்று எங்கள் இருவரையுமே எங்கள் பெற்ருேர் எட்டிப் பார்க்க விடவில்லே. ஆனால் ராஜி சரளமாக ஆங்கிலம் பேசுவாள். பழக்கம்தான்் காரணம். புத்தாவது வரை படித்தவர்கள் நன்ருக ஆங்கிலம் பேச முடியும், பிழையின்றி எழுத முடியும் எ நிருந்த காலத்தைப் பற்றிச் ன் ன்

§

o