பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொட்டுகிறது. 'அம்மா, பாத்தி, தாத்தா,

வாந்தாம், வோணும்' வைதான்் அவ விடய பச்சுக்கள். "பள்ளிக்கூடமே அனுப்பவில்லேயடி. ராஜி எப்படியாகிவிட்

டாள் தெரியுமா? தலேயெல்லாம் குப்பென்று நரைத்துப் போய்ப் பார்க்கச் சகிக்கவில்லை' என்ருள் அம்மா, கங்கையில் புடவையை அலசியபடி. நாங்கள் அப்போது வாரணுசி யில் இருந்தோம். குபிரென்று கண்ணிர் சூடாகப் பெருகிக் கங்ண்கயுடன் கலக்க நான் பேச்சற்று நின்றேன். தவமென்றால் சாதாரணமாக இல்லை, சர்க்கரை இல்லாமல் காப்பி குடிப்பாள். இனிப்பே சாப்பிடாமல் இருந்தாள். தரையை மெழுகிப் பின்னல் கைகளைக் கட்டிக் கொண்டு வாயால் சாதத் தைக் கெளவி எடுத்துச் சாப்பிடுவாள். எல் லாம் இந்த அழகான பிள்ளை பிறக்க வேண்டு மென்றுதாஞ?

அன்னபூர்னேசுவரியின் கோயிலை வலம் வந்து கொண்டே என்னென்னவோ நினைத் துக் கொண்டேன். தேவியின் அருள் ஒழுகும் முகத்தைப் பார்த்தவுடன், அவள் ஏன் இப்படித் தன்னை நம்பிய பேதை ஒருத்தியைச் சோதித்து விட்டாள் என்பது புரியாமல் இல்லை. கடவுளின் தன்மை, அவன் செயல் யாருக்குப் புரிகிறது ?

"அப்புறம் பிறந்த குழந்தைகள் இதைப் போல இல்லை. சமர்த்தாகப் படிக்கின்றன. இருந்தாலும் மூத்தது இப்படியாகிவிட்டதே என்று மாய்ந்து போகிருள். 'எப்படியாவது அவனும் ஒரு மனுஷன் ஆகிவிட வேண்டும். அவ்வளவுதான்் மாமி’ என்ருள் என்னிடம். "கவலைப்படாதேடி. பகவானுடைய அதுக் கிரகத்தால் எல்லாம் நன்ருக இருப்பாள்" என்றேன்...... H. F is

அம்மா வீட்டுக்கு வரும் வழியில் பேசிக் கொண்டே வந்தாள்.

வாரளுசியில் எங்களுடன் இரண்டு மாதங்கள் தங்கிவிட்டுப் போனவள் அப்புறம் வரவில்லை. அவள் காலம் ஆகிவிட்டது. இந்த அவசர யுகத்தில் யாரைப் பற்றி நினைக்கப் பொழுதிருக்கிறது?

என்னுடைய குழந்தைகள் வளர்ந்தார்கள். அவர்களுடைய படிப்பு, கல்யாணம் என்று எங்களைப் பற்றியே கவலைப்பட்டுக் கொண் டோம். எங்கேயாவது ஒர் அசட்டுக் குழந்தை யைப் பார்த்தால் ராஜியின் பிள்ளை பாலுவின் நினைவு வரும்.

"இப்படியும் அப்படியும் தலையைச் சாய்த்து வாயில் ஒழுகும் எச்சிலுடன் பேந்தப் பேந்த விழிக்கும் அந்தப் பிள்ளை. 'என்ன பரிதாபம் இது?" என்றுதான்் மனத்துக்குள் குமைந்து போவேன். *

ராஜியின் பெண் கல்யாணத்துக்கென்று திருமணப் பத்திரிகை வந்தது. பெரிய பிள்ளே யைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை. 'அசடு தான்் அவள் தலையெழுத்து இப்படி ஒரு பிள்ளையைப் பெற்ருள்!' என்று என் கணவர் கூறிஞர் அங்கலாய்ப்புடன்.

என்னதான்் வடக்கே பல வருஷங்கள் வேலையாக இருந்தாலும் பென்ஷன் வாங்கிக் கொண்ட பிறகு ஊரோடு போய் இருப் போமே என்று தோன்றியது. கிராமத்திலே அம்மாவுக்குச் சொந்தமான மனேயில் அவர்

பாணியில் ஒரு சின்ன "காட்டேஜ் கட்டிக் கொண்டோம். வீட்டைச் சுற்றிச் செடி கொடிகள் போட்டார். ஏதேதோ விவசாயப் புத்தகங்களை வைத்துக் கொண்டு ஆராய்ந்து

செடிகள் வளர்ப்பதில் அவர் பொழுது போய்க் கொண்டிருந்தது.

இந்தச் சந்தர்ப்பத்தில்தான்் ராஜி கிராமத்துக்கு வந்தாள். நாங்கள் அந்த ஊரில் இருக்கிருேம் என்று கேள்விப்பட்டுத்

தான்் வந்தாளாம். அவள் பிறந்தகத்தில் யாரும் இல்லை. அவளுடைய தமையன்கூட வீட்டை விற்று விட்டான். பழைய தலை முறையின் பாசத்தில் வளர்ந்து ஒளி கூட்டிய வீடு புதிய தலைமுறையினரால் ஒதுக்கப்பட்டுச் சிதிலமாகி இடியும் நிலைக்கு வந்து விடவே விற்கும்படியாயிற்று. யாரோ ஒரு கணக்குப் பிள்ளே வாங்கி ரிப்பேர் செய்து கோயிலுக்குத் தருமமாக எழுதி வைத்திருந்தார்.

நான் அந்தக் கிராமத்துக்கு வந்த மறு தினமே ராஜியின் வீட்டைப் போய்ப் பார்த் தேன். வாசலில் சாய்மானத் திண்ணைகள். அந்தத் திண்ணைகளில் நானும், அவளும், ஊர்ச் சிறுமிகளும் நிலாச் சோறு சின்னச் சின்னக் குடுவைகளில் சமைத்திருக்கிருேம். பொம்மைக் கல்யாணம் பண்ணியிருக்கிருேம். நான் பிள்ளே வீட்டைச் சேர்ந்தவள். சம்பந்திச் சண்டை, அது இது எல்லாம் உண்டு.

வாயைப் "பம்"மென்று வைத்துக் கொண்டு நாயனம் ஊதுவாள் ராஜி. தலை வேகமாக டும்...... அந்தத் திண்ணையை ஒட்டியிருந்த லேப்படியின் அருகே ஒரு சாஸனம் காணப் பட்டது. அதை வாங்கிய கணக்கர் தமக்குச் சந்ததியில்லாமையால் பூரீ ராமலிங்கேசுவரர் தேவஸ்தான்த்துக்கு மான்யமாக அளித்து விட்டதாகவும், அதில் வரும் வாடகையைக் கொண்டு எண்ணெய் வாங்கித் திருவிளக் கேற்றும் திருப்பணியைக் கோயிலார் மேற் கொள்ள வேண்டும் என்றும் அறிவித் திருந்தார்.....

வீட்டில் குடியிருந்தவர்கள் நாலு மாத வாடகை பாக்கி. எனவே, பூரீ ராமலிங் கேசுவரர் அநேகமாக இருளில் மூழ்கி யிருந்தார்.

பல வருஷங்களுக்கப்புறம் வந்திருக்கிற வளே "எங்கே வந்தாய்' என்று கேட்க எனக் மனசு வரவில்லை. குடும்பத் தொல்லைகளி லிருந்து விடுபட ஒரு மாறுதலுக்காக வந் திருக்கலாம். வேறு ஏதாவது காரணம் இருக்க லாம். பெண்ணுக்குக் கல்யாணம் நிச்சய மாகியிருக்கும். பணமுடையாக இருக்கலாம். கடன் கேட்க வந்திருக்கலாம்.

இருவரும் சாப்பிட்டு விட்டு ஊஞ்சலில்

நலுங்கு,

உட்கார்ந்து வெற்றிலே போட்டுக் கொண் டிருந்தோம். ராஜி அரைக் கவுளி வெற்றிலே யைக் காலி செய்து விட்டாள். சுண்டினுல்

ரத்தம் தெறித்து விடும் போல் நல்ல சிவப்பு அவள். ஒரு காலத்தில் உதடுகளும் செம் பவழம் போல் இருந்தன. இப்பொழுதும் அவள் அழகு குலேயவில்லை. பாவம், அந்தக் கண்களில்தான்் ஏக்கம். அதுதான்் தெரிந்த விஷயமாயிற்றே!

இப்படியும் அப்படியும் தலையைச் சாய்த்து வாயில் ஒழுகும் எச்சிலுடன் பேந்தப்