பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சம்பா இவ்விதம் கூறிவிட்டு மாலதி யைப் பார்த்து விரக்தியாகச் சிரித் தாள்.

வலுவில் அந்தக் குடும்பத்துடன் பேசி, வலிய நட்புறவு பூண்ட அந்த இளைஞனின் கண்கள், சமையலறையில் நடமாடும் சம்பாவின் பேரிலேயே பதிந்திருந்தன. பெண்களின் விழி களைத் துள்ளும் கயல்களுடனும், கூந்தலைக் கரிய மேகத்துடனும், பாதங்களைத் தாமரை மலர்களுடனும் ஒப்பிட்டு அவன், சம்பாவின் தந்தை யிடம் மணிக் கணக்கில் பேசுவது வழக்கம். அந்த அப்பாவி மனிதர் தமக்கு ஏற்பட்டிருந்த - நஷ்டத்தை இந்தப் பையனின் பேச்சில் லயித்து மறந்து விட முயன்று கொண்டிருந் தார்.

அன்று தந்தையும், தம்பிகளும் வெளியே போய் விட்டார்கள். வழக் கம் போல் இளைஞன் வந்தான்். திரை மறைவில் ஆடப்பட்ட நாடகம், மேடையில் அரங்கேறுவது போல்

ருவரும் நேருக்கு நேர் சந்தித்துக்

காண்டார்கள். அதன் விளைவு, பெற்ற தந்தையை விட்டு, உடன் பிறந்தவர்களைவிட்டு, இன்று அநாதை யாக இந்த வேப்ப மரத்தடியில் கிடக்கிருள் சம்பா கலைகளில் ஆர் வம் கொண்ட அவன், இவளைக் கலை களில் ஈடு படுத்தாமல் இருப்பாளு? உபரி நடிகையாக இந்தச் சம்பா நடிக்காத படமே இல்லை. சீக்கிரத்தில் அவளை நட்சத்திரப் பதவிக்கு உயர்த் துவதாக அவனும் எவ்வளவோ செப்து பார்த்தான்். சீர்கெட்ட உடல், மனத்தில் அமைதிக் குறைவு, எல்லாமாகச் சேர்ந்து சம்பா துப்பி விட்ட பண்டமாக இருக்கிருள்."

கடிகாரம் மூன்ற டிப்பது காற்றில் மிதந்து வந்தது, மாலதிக்குத் தான்் வெகு நேரம் அங் கிருந்து விட்டது நினைவுக்கு வரவே. விடம் விடைபெற்றுக் கொண்டு

எங்கிருந்தோ

சம்பா கிளம்பினுள்.

அன்றுமா லே முழுவதும் மாலதிக்கு வீட்டில் வேலை இருந்தது. பள்ளி

யிலிருந்து திரும்பும் குழந்தைகளுக்கு டீ தயாரித்துத் தின்பண்டங்கள் செய் தாள். தலை பின்னிக் கொண்டாள். மேஜை மீது வேலைக்காரி வைத்திருந்த மலர்ச் சரத்தை எடுத்து வளைத்துத் தலையில் சூட்டிக் கொண்டாள். சுவா மிக்கு விளக்கேற்றினுள். தம்புராவைச்

90

சுருதி சேர்த்து இழையும் குரலில் "மாணிக்க வீணும்....' என்று பாடி: முடித்தாள். திடீரென்று மேகம் வில கிய வானம்போல, சம்பாவின் எண் னம் அவள் மனத்தில் பளிச்சிட்டது.

காற்று வேகமாக வீசுவதாக எண்ன்னி, வேலைக்காரி சாத்தியிருந்த ஜன்னல் கதவுகளை அகலமாகத்

திறந்து அடுத்த வீட்டை எட்டிப் பார்த்தாள்.

அங்கே சுவரில் சாய்ந்தவாறு சம்பா மாலதியின் இனிய இசையைக் கண் மூடி ரசித்துக் கொண்டிருந்தாள். நீல வானில் வெண் நிலவு முளேத்து விட் டது. சம்பாவின் மெலிந்த உடலெங் கும் நிலவின் ஒளிக் கீற்றுக்கள் பறந் தன. உள்ளே இருந்தவர்கள் போய் விட்டார்களா என்று உற்றுப் பார்த் தாள் மாலதி. உள்ளேயிருந்து மிகவும்

லேசாக 'ஸ்டவ்' எரியும் சத்தம் கேட்டது.

கண்களைத் திறந்தவுடன், ஜன்ன

வில் தோன்றும் அந்த அழகிய கருணை யுள்ள முகத்தை இமைக்காமல் பார்த் தாள் சம்பா. உலகில் நிலவும் கொடு. மைகளின் இடையே ஆட்சி செலுத் தும் நன்மையைப்போல, மாலதி புன்

முறுவலுடன் சம்பாவைப் பார்த்

தாள். -

சாப்பிட்டாயா?' என்று மரியா

தையை ஒதுக்கி வைத்து விட்டு

உரிமையுடன் ஒருமையில் அழைத்துக் கேட்டாள்.

'இல்லை. ... ஸ்டவ் பற்ற வைத் திருக்கிறேன். ஏதாவது கஞ்சி வைத் துச் சாப்பிடுவேன்...அதிகமாகச் சாப்பிட்டால் இரவில் எனக்கு ஜீரண மாவதில்லை. சாப்பிடக் கூடக்

கொடுத்து வைக்காதவள்...'

வைத்தியரைப் ப ா ர் ப் ப து தான்ே?"

'பார்த்து இந்த உடம்பைக் காப் பாற்றி, நான் என்ன பிரமாதமாகச் சாதித்து விடப் போகிறேன்?'

மாலதியின் அழகிய புருவங்கள் கோபத்தால் சற்று ஏறி இறங்கின. இந்த வரட்டு வேதாந்த மெல்லாம்

அவளுக்குப் பிடிக்காது. இனிய பொழில்கள், வயல்கள். மலேகள்,

கனிகள், காய்கள் யாவுமே மனிதன் வாழவென்றே படைக்கப் பட்டிருக் கின்றன. ஒவ்வொரு விநாடியும் வளர்ச்சியும், வளமும், கொழிக்கும் வாழ்க்கையை ஒவ்வொருவனும்