பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ருசித்து அனுபவிக்க வேண்டும். அது மனிதனின் உரிமை. இறைவன் கொடுத்திருக்கும் இந்த உரிமையைப் பறிக்க நாடுகளுக்கிடையே நடக்கும் கொடுமைகளும், போர்களும், அதற்கு மேலாகச் சம்பாவைப் போல வரட் டுப் பேச்சுப் பேசுகிறவர்களும் அவ ளுக்கு எட்டிக் காயாகக் கசந்தன.

'உன் அவர் சாப்பிட வர மாட் டாரா?' என்று தன்னைச் சமாளித் துக் கொண்டு கேட்டாள் மாலதி. இப்பொழுது மாலதியின் குழந்தை க்ள் இருவரும் ஜன்னல் அருகில் வந்து,தன் தாய் யாருடன் பேசுகிருள் என்று கவனித்தார்கள்.

'உங்கள் குழந்தைகளா?' என்று கேட்டு விட்டு, ஏக்கப் பெருமூச்சு விட் டாள் சம்பா,

பத்து வருஷங்களுக்கு முன்பு, தான்் விட்டுப் பிரிந்து வந்த இரண்டு தம்பி களின் நினைவு வந்தது அவளுக்கு.

குழந்தைகளா அவர்கள்? தங்கக் குஞ்சுகள்! அக்கா! அக்கா!' என்று அவளைச் சுற்றிச் சுற்றி வந்தார்களே! அந்தத் தூய சகோதர பாசத்தை நொடியில் எப்படி அவளால் உதறி

எறிய முடிந்தது? சம்பா மறுபடியும் லிருந்து வந்து

மாலதியைப் பார்த்து, 'என்ன கேட் டீர்கள்! அவர் இரவு வருவதே சந்

தேகம். எங்கோ படப் பிடிப்பு இருக் கிறதாம். பகலில் ஒருத்தி பாடி ளுளே, அவளே அங்கு அழைத்துப் போகப் போகிருராம்... கலைகளை

வளர்க்கிருர் அம்மா...அவர், கலைகளை வளர்க்கிரு.ர்.....'

மாலதியின் நெஞ்சம் பட படத் தது. அவனைப் போய்த் தரதரவென்று இழுத்து வந்து, "இதோ உன் கட்டிய மனைவி.... என்ன? கட்டிய மனைவி..." எண்ணம் தடைப்பட்டது. சட் டென்று மாலதி கம்பிகளின் இடையே கண்களைக் கூர்மையாகச் செலுத்தி சம்பாவின் கழுத்தை ஆராய்ந்தாள். அங்கே புனிதமாகக் கருதப்படும் மாங் கல்யச் சரட்டைக் காணுேம்! போலி முத்து மாலே, தன் பவிஷை இழந்து துவண்டுகிடந்தது.

மாலதிக்குக் கண்ணிர் குப்பென்று பொங்கி வந்தது. பெண்கள்தான்் எத்தனை பலஹீனமானவர்கள்? இவள் அவனைக் கணவன் என்கிருள், அவனே? உள்ளே கஞ்சி பொங்கி வழிந்து, தீய்ந்து போகும் வாசனை வீசியது. மாலதியின் கணவனும் அலுவலகத்தி

விட்டான்.