பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிங்காரித்து வைத்து அண்டை அயலில் ஊர் அழைத்து அமர்க்களமாகத் தான்் செய்ய நினைத்திருக்கிருர்கள். கல்யா னமா சொக்கா ? லீலாவின் ராஜா பொம்மைக்கும். மீனுவின் ஜீ.ஜி பொம் மைக்கும் அன்று கல்யாணம், போன ஞாயிற்றுக்கிழமையே ராஜா போய்ப் பெண்ணைப் பார்த்து விட்டு வந்தாள்.

ரொம்ப ரொம்ப புடுச்சிது அம் மான்னு ராஜா சொல்ருள்...' என்று லீலா தன் ஒப்புதலே மீனுவிடம்

சொல்வி விட்டாள்.

மீனுவும் ராஜா பெண் பார்க்க வந்த அன்று உப்பு பிஸ்கோத்தும், டாபி சாக்லேட்டும் கொடுத்து சம் பந்தி அம்மாளை உபசாரம் பண்ணித் தீர்த்து விட்டாள். அந்தப் பிஸ்கோத் துக்காகவும், சாக்லேட்டுக்காகவுமே லீலா ஒப்புக்கொண்டு விட்டாள்.

இதெல்லாவற்றையும் விட மீனுவின் அம்மா. உஷா இவர்களுடன் சேர்ந்து கொண்டு லூட்டி அடிக்க ஆரம்பித்தி ருக்கிருள். கடையிலிருந்து பிஸ்கோத்து கள், பழங்கள். தின்பண்டங்கள் என்று பத்து ரூபாய்களுக்கு வாங்கித் தள்ளி விட்டாள். கேட்க வேண்டுமா குழந் தைகளின் மகிழ்ச்சிக்கு ! பெரியவர்க்ள் அதைப் பொம்மைக் கல்யாணம் என் பார்களே தவிர, குழந்தைகள் உண் மைக் கல்யாணம் என்றே தங்கள் எண் ணங்களை அதில் தேக்கவிட்டு அதற்குள் மூழ்கி இருந்தார்கள்.

ராஜா பொம்மையும் ஜிஜி பொம் மையும் பழைய மரப் பொம்மைகள் அல்ல : இந்தக் காலத்து நவீன பொம் மைகள். ஆனல் கல்யாண மென்னவோ பழைய காலத்திலிருந்து குழந்தைகளி டம் ஒன்றி வந்ததுதான்். காலம்தான்் வேறே தவிர செயல் ஒன்றுதான்்.

அடியே லீலா? உன்னை எத்தனை தரம் கூ ப் பி ட றது? நீயும், உன் திமிரும்...' பங்கஜம் கோபக் கனல் பறக்க எண்ணெய்க் கிண்ணத்தை "நக்" கென்று கீழே வைத்தாள்.

கீழே யிருந்து பேரிரைச்சலாக வந்த அந்தச் சத்தம் மாடிக் கூடத்தில் புகுந்து அலைமோதிற்று. லீலாவும் மீனுவும் தத்தம் காதுகளைப் பொத்திக் கொண்டு ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார் கள். எல்லாம் தெரிந்தவர்கள் இந்தப் பெரியவர்கள் என்கிருர்களே, இவர்க க்குக் குழந்தைகளைப் பற்றி ஒன்றுமே தரியவில்லையே என்றுதான்் இருவரும் நினைத்திருக்க வேண்டும். இரங்கற்

82

பார்வை ஒன்றை அவர்கள் இருவரும் பார்த்துக் கொண்டு மறுபடியும் பொம் மைகளை அலங்கரிப்பதில் முனைந்தனர்.

கீழே வெந்நீர் அறையில் பக்கெட் தடாலென்று வைக்கப் பட்டது.

அடியே லீலா சனியன்......'

இதோ வந்துட்டாள் பெம்மா. சித்த நாழி கழிச்சு வந்துடுவான். ' பெரிதாகத் தாண்டை எடுத்துக் கத்தினுள் மீன. பெரியம்மா’ என்று

அவளுக்கு அழைக்க வருவதில்லை.

மாடிக்கும், கீழுக்குமாகச்சொற்போர் நடப்பதைக் கவனித்தவாறு வந்த உஷா. நீங்கள் குளித்து விட்டு வாருங்கள் மன்னி. லோ விளையாடிவிட்டு வந்ததும் நான் எண்ணெய் தேய்த்து விடுகிறேன்' என்று கூறி பங்கஜத்தை சமாதான்ப் படுத்த முயன்ருள். ஆனால் பங்கஜத் தின் இரு கண்களும் இரு தீப்பந்தங்க ளாகச் சிவந்து தகதகவென்று ஒளி வீசின. அவள் பார்வையின் ஒளியைத் தாங்க மாட்டாமல் உஷா தலையைக் குனிந்து கொண்டாள்.

உன்னுல்தான்் அந்தச் சனி இப்படி யாகிவிட்டது. கடா மாதிரி ஒன்பது வயசாகிறது. எனக்கு ஒத்தாசையதுக் விரலை மடக்குகிறதா அது : சதா :3కిr யாட்டும், கூத்தும்தான்்.

மாடிக் கூடத்தில் கலிரென்று சிரிப் பொளி கிளம்பிற்று. சற்று முன் லீலா வும், மீனுவும் மட்டும் இருந்த இடத் தில் அண்டை அயல் வீட்டுக் குழந்தை கள் வேறு வந்து குழுமியிருந்தனர். லீலா அந்த இடத்துக்குச் சர்வாதிகா ரினியாக விளங்கிள்ை.

இதோ பாருங்கடி நான் பிள்ளை யைப் பெற்றவள், சம்பந்தியாக்கும் ! நான் சொல்கிறபடிதான்் மீனு கேட்க வேண்டும். இல்லையாடி ?"

ஆமாம். ஆமாம். லீலா சொல் கிற-இல்லை, இல்லை- சம்பந்தி சொல் கிறபடிதான்் மீனு கேட்கவேண்டும்-' வந்திருந்த பெண்களில் ஒருத்தி ஆமோ தித்தாள். மீனுவுக்கு அவள்மீது கோபம் தான்். இருந்தாலும் அவளேவிட வயதி லும் விளையாட்டு அனுபவத்திலும் அத் தப் பெண் பெரியவள். ஆகவே, மீன முகத்தைத் தூக்கிக் கொண்டு மெளன மாக இருந்தாள்.

பின்னே என்னவாம்? பெண்ணுக்கு ஹாம்...வந்து ஜீஜிக்கு சிவப்பு சாத்திலே தான்் பொட்டு வைக்கணுங்கறேன். இவ வந்து கறுப்புச் சாத்துங்கரு. இப்ப