பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்று புருஷன் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு ஒடி விட்டானமே !

" உனக்கு வேறு குழந்தைகள் இருக் கிரு.ர்களா ?' என்று கேட்டேன்.

இருக்கிருர்கள். மூன்று குழந்தை களை அனதைப் பள்ளிக்கூடங்களில் விட் டிருக்கிறேன். நான்காவதாக இதையும் ந ா ன் அஞதையாக்குவதற்குத்தான்் சுமந்து கொண்டு வருகிறேன் ' என்ருள்

அந்தப் பெண்.

பிறகு அவள் கூறிய வரலாறு இது ITEMT :=

அவளும், அவள் கணவனும் எல் லோரையும் போல் விவாகம் செய்து கொண்டு.ஆனந்தமாக இல்வாழ்க்கையை ஆரம்பித்தவர்கள்தான்். முதல் குழந்தை பிறந்தவுடன் அவளுடைய கணவனுக்கு வே லை போயிற்று. இரண்டாவது பிறந்தவுடன் கண்வனின் உடல் நலமே பாதிக்கப்பட்டு வி ட் - து. மூன்ரு குழந்தையின் போது இந்தப்

வது .ெ ப ன் ேன யாதியாகப் படுத்து விட்டாள். வறுமையின் கொடிய பிடி

யில் சிக்கி அந்தக் குடும்பம் தத்தளித்த போது, சிலர் இரக்கப்பட்டுக் குழந்தை களை அளுதை விடுதிகளுக்கு அனுப்பி வைத்தார்கள். வியாதியிலிருந்து மீண்ட வுடன் தன் வயிற்றில் மறுபடியும் ஒரு உயிர் வளர்வதை உணர்ந்தாள் அவள். இந்த ரகசியத்தைக் கணவனிடம் அவள் தெரிவித்தபோது அவன் அலட்சியமாகச் சிரித்தான்். ' வேண்டியதுதான்் ! நம் முடைய பரம்பரை பெருக வேண்டியது தான்் !' என்ருன் சிரிப்பினிடையே. ஆனால், அவன் உள்ளத்தில் குமுறும் என்னங்கள் சீறிக்கொண்டு வார்த்தை களாக வெளி வந்தன.

"முதலில் அந்தப் பீடையை முளையி லேயே கிள்ளி விட ஏதாவது வழி இருக் கிறதா என்று பார், சாரதா 1' என்று இன்ரந்தான்். அவன் வார்த்தைகளின் சிற்றத்தைப் பார்த்தால் அவன் மூன்று குழந்தைகளுக்குத் தகப்பன என்று ஆச் சர்யப்படத் தோன்றும்.

என்ன பண்ணச் சொல்கிறீர்கள் ?' என்று கேட்டாள் சாரதா.

என்ன பண்ணச் சொல்கிறேன ? பெற்றுப் பெற்று அைைத ஆச்ரமத் துக்கு அனுப்பச் சொல்கிறேன் ! யாரிட ம்ாவ்து ஏதாவது மருந்து வாங்கிச் சாப் பிடு. கர்ப்பச் சிதைவுக்கு எத்தனையோ மருந்துகள் விற்கின்றன. பிச்சை வாங்கி யாவது மருந்தை வாங்கி வருகிறேன்.'

66

சாரதாவின் உடம்பெல்லாம் பதறி யது. முழுசு முழுசாக மூன்று குழந்தை களைப் பெற்ற அன்னை அவள். நான்கா வது வேண்டும் என்று அவள் கோவிலுக் குப் போகவில்லை. நோன்புகள் செய்ய

ຄoອບຂຶ້ນ. இருந்தாலும் கர்ப்பத்தைச் சிதைப்பதா ? வளரும் உயிரை அழிப் பதா ?

"" ஹூம்...... சாப்பிடுகிருயா வாங்கி வருகிறேன் ' என்ருன் மீண்டும்.

வேண்டாம், என்னல் முடியாது ' என்ருள் சாரதா தீர்மானமாக.

சி! நீயும் ஒரு மனுவியா ? வெட்கம் அற்றவள் !' என்று கணவன் கூறிவிட் டுச் சென்றவன்தான்். மூன்று மாதங் களாக அவனைப்பற்றித் தகவலே இல்லை.

--

சிTரதாவின் கதையைக் கேட்டு என் மனம் புண்ணுக வலித்தது. தாய்மையை ஒரு மகத்தான் பேருகக் கருதி இருந்த நாம் இவ்வளவு தூரம் அதைத் தாழ்வு படுத்துகிருேமே எ ன் று வருத்தப் பட்டேன். குழந்தைகள் பெருகாமல் இருப்பதற்கு வேண்டுமானல் எதையா வது செய்துவிட்டுப் போகட்டும். கர்ப் பத்தில் வளரும்_உயிரை அழிப்பதற்குக் கூட வழி இருக்கிறதாமே? எனக்கு அது பிடிக்கவில்லை. யோசனையிலிருந்து விடு பட்ட நான் ஏறிட்டு அவளைப் பார்த் தேன்.

" அப்புறம் ? நீ என்ன செய்வதாக உத்தேசம் ? உனக்கு ஆறுமாசம் இருக் கும்போல் இருக்கிறதே?' என்று கேட் டேன்.

என்னத்தைச் செய்கிறது ? அவர் சொன்னதைக் கேட்காமல் போனே மே ?' என்று வருத்தமாக இருக்கிறது என்ருள் சாரதா.

'சட்டென்று எந்த முடிவுக்கும் வந்து விடாதே அம்மா. வளரும் உயிர் உன் னுடையதல்ல. அது ஆண்டவனுக்குச் சொந்தம்' இதற்கு மேல் நான் ஆவ ளுக்கு ஒன்றும் சொல்ல முடியவில்லை. தெருத் திண்ணையில் அவள் படுத்துக் கொள்ள வசதிசெய்து கொடுத்துவிட்டு, நான் என் வேலைகளைக் கவனிக்கப் போய்விட்டேன்.

2

நடு இரவில் என்னுள்ளே ஒரு பயம்

என்னைத் துரங்கவிடாமல் .ெ ச ய் து கொண்டிருந்த்து. பிள்ளைத்தாச்சியைத்