பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தவன உற்சவம் ஆன அடுத்த வெள் ளிக்கிழமை, அம்பிகை காமாட்சியைப் பார்த்து ஒரு வாரத்துக்கு மேலாகி விட் டதே என்கிற எண்ணத்தில்ை உந்தப் பட்டு, இரவு ஒன்பது மணிக்குக் கோவி லுக்குப் போனேன். கோவிலில் அன்று கூட்டம் அதிகமில்லை. அம்பிகையின் தரிசனம் முடிந்து அநேகர் போய் விட் டார்கள். உள்ளே நாகசாமி தீட்சிதர் மட்டுமே இருந்தார். சுவாமி பிர சாதம் கொடுங்கள் ' என்றேன்.

நீயா காமாட்சி ? கைப் புண் எப் படி இருக்கு அம்மா ?' என்று விசாரித்

гггг.

தேவலே ' என்றேன் நான் சிரித்துக் கொண்டு.

போகிறது போ. அரங்கேற்றம் பிரமாதமாக இருந்தது. ஆனால் உன் அம்மா பணத்தாசை பிடிச்சவள். எங் கேயாவது வகை தெரியாமல் உன்னைத் தள்ளி விடப்போகிருள் ! நானும் அவ எளிடம் அப்படி யெல்லாம் குழந்தையைப்

பாழடித்து விடாதே என்று சொல்வி இருக்கிறேன். '

சுவாமி கல்யாணம் அவசியமா?

இப்படியே கன்னியாகவே காலம் கழித்து விட்டால் என்ன?' என்று அவரைக் கேட்டுக் கொண்டே, அவர் கொடுத்த கதம்பத்தைக் கூ ந் த லில் சூட்டிக் கொண்டு, நெற்றியில் குங்குமத்தையும் இட்டுக் கொண்டேன். o

தீட்சிதர் என்னையே உற்றுப் பார்த் தார்.

அம்மா ! இதெல்லாம் நம் சித்தப் படி நடப்பதில்லை. இந்த ஜகன்மாதா புரியும் லீலைகளை உன்னலும், என்னலும் அறிய முடியுமா? அவள் என்ன நினைத்தி ருக்கிருளோ. அதன்படி ஆட வேண்டிய வர்கள் நாம் ' என்றார்.

உண்மை அவள் என்னே அன்றே ஆட்டுவிக்க ஆரம்பித்தாள். சன்னிதியில் நான் நின்றிருக்கும்போதே இ ர ண் டு வாலிபர்கள் தேவியின் தரிசனத்துக்காக வந்தார்கள்.

நான் சன்னிதியை_விட்டுப் புறப்பட் ட்ேன். காமாட்சி கற்பூர தீபா ராதனை நடக்கிறது. பார்த்து விட்டுப் போ அம்மா !' என்றார் தீட்சிதர்.

இரண்டாவது வாலிபன் என்னைத் ரு ம் பி ப் பார்த்தான்். வாய்க்குள் காமாட்சி காமாட்சி ' என்று சொல் விக் கொண்டான். தீபாராதனை முடிந் ததும், சுவாமி நான் படம் எழுது கிறவன். இரண்டு நாட்கள் காஞ்சியில்

70

தங்க வேண்டும். வசதி செய்து # முடியுமா ?' என்று கேட்டான். அதே கேள்வியை முதல் வாலிபனும் கேட் டான். நான் ஒரு கணம் தயங்கினேன். பிறகு சட்டென்று என்னையும் அறியா மல், ' என் வீடு அருகில்தான்் ருக் கிறது. வந்து த ங் கி ப் போகலாம்" என்று அழைத்தேன்.

அந்தக் கவிஞனும், சித்திரக்காரனும் என்னுடன் வீட்டிற்கு வந்தனர். is

படம் எழுதுகிற வாசுதேவன் என்னி டம் அடுத்த நாள் கேட்டார்: 'பத்மா சனம் ப்ோட்டு தேவி உட்கார்ந்திருக்கிற நிலையில் ஒரு படம் எழுதிப் புத்திரி கைக்கு அனுப்ப வேண்டும். நீதான்் அபிநயத்தில் தேர்ந்தவள் ஆயிற்றே? ஒரு நிலையில் உட்கார்ந்தால் படம் எழுதி முடித்து விடுவேன்' என்று.

கவிதை பொழியும் வாலிபர் சொன் ஞர்: "அப்பெர்ழுது நான் அந்நிலையை ஒரு பாட்டாகப் புனைந்து பாடுவேன். அதைக் கேட்டவர்கள் உருகிப் போவார் கள். தேவியே பிரத்யட்சமாக எதிரில் இருப்பது போல் ஆனந்தம் அடைவார் கள் ' என்றார்.

பாடலைக் கேட்டு உருகிப் போவார் கள் என்பது வாஸ்தவம் தான்் அப்பாடு ஆனால், நேரில் ஒவியத்தில் அம்பிகை ன்ய்ப் பார்த்தார்களானல் உன் பாடலே விட அதைத்தான்் அதிகம் ரசிப்பார் கள் ' என்றார் வாசுதேவன்.

கவிஞன் பெருமூச்சு விட்டான் !

" உன் கலை உனக்குப் பெரிது. இருந் தாலும் என்னைத் தாழ்வு படுத்துகிருய். நீ படம் எழுது. நான் பாட்டு எழுது கிறேன். காமாட்சியே தீர்ப்புக் கூறட் டும்' என்றார்.

நான் திடுக்கிட்டென். "கலைஞர்களுக் குள் போட்டியா ? பந்தயமா ?' என்று திகைப்படைந்தேன்.

அடுத்த வியாழன் அன்று இருவரும் பாட்டும், படமும் எழுதுவது என்று தீர் மானமாயிற்று. இருவரும் என்னே விரும் புவதாகவே எனக்குத் தோன்றியது.

புதன்கிழமை மாலை கவிஞர் எங்கோ வெளியே போய்விட்டு வந்தார். வந்த வர், ' காமாட்சி ! தலைவலி மண்டை யைப் பிளக்கிறது. ஏதாவது கஷாயம் வைத்துத் தருகிருயா ?' என்று கேட்

டார். கஷாயம் வைத்துக் கொடுத் தேன். இரவு கடுமையான ஜுரம். எனக்குப் பயமாக இருந்தது. காலேயி