பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தான்் அகல விழித்த கண்களுடன்

அந்தக் குழந்தை சொல்வதைக் கேட்டுக்

காண்டே இருந்தேன்.

ஜன்னல் வழியாகப் பாயும் சூரிய வெளிச்சம் என் முகத்தில் சுரீரென்று குத்தியது. கண்களைத் திறந்து பார்த் தால் சாரதா அப்பொழுதுதான்் துாக் கம் கலந்து எழுந்து உட்கார்ந்திருந் தாள். என் மனத்தில் விவரிக்க முடியாத ஆச்சர்யமும், பயமும் நிறைந்தது. என்ன அதிசயமான கனவு ? கனவா அது ? கர்ப்பத்தில் வளரும் ஒரு ஆத்மாவின் புனிதமான சரிதை அல்லவா ? ஆனால் வெளியில் யாரிடமாவது சொல்ல முடி யுமா இதை ? நம்புவார்களா ?

'நன்ருகத் துரங்கிட்ை போல் இருக் கிறதே ?' என்று சாரதாவைப் பார்த் துக் கேட்டேன்.

"ஆமாம், துரங்கிப் போனேன். அழ கிய பெண் குழந்தை ஒன்று மழலை பேசி என்னச் சுற்றி சுற்றி வந்தது. குழந்தை தான்் என்ன அழகு போங்கள் !' என் ருள் சாரதா சிரித்த முகத்துடன்.

நான் அவளுக்குப் பதில் எதுவும் கூற வில்லை. நான் கண்ட கனவைப் பற்றியே என் மனம் ஆ ழ் ந் து சிந்தித்துக் கொண்டே இருந்தது.

அடுத்த நாள் வெள்ளிக்கிழமை. காலே யிலேயே சாரதாவுக்கு உடம்பு சரியில்லை.

அவசரமாக வீட்டு வேலைகளைக் கவ னித்து விட்டு அவளை டாக்டர் சத்ய பாமாவின் ஹோமு’க்கு அழைத்துப் போனேன்.

என்னைச் சாரதா அதிக நேரம் காத் திருக்கும்படி செய்யவில்லை. ஏதோ அலுவலாக வீடு சென்று திரும்பிய என்னைப் பிரசவ அறையிலிருந்து 'குவா குவா ' என்று குழந்தையின் அழு குரல் வரவேற்றது.

சாரதாவின் அருகில் தங்கச் சிலை மாதிரி அழகிய பெண் குழந்தை ஒன்று படுத்திருந்தது. ஆஹா குழந்தைதான்் என்ன அழகு அந்தக் கண்களில் தான்் என்ன கவர்ச்சி ? காதளவு நீண்ட அந் தக் கருவிழிகளின் அசைவிலே எத்த 3னயோ பாவங்களை வெளியிட முடியும். கனவு லோகத்திலே நான் கண்ட அந்தப் பெண்தான்்... ஒருவேளை அதெல்லாம் நிசந்தான்ு ?

ட க்டர் சத்யபாமா வந்து என்

தோளின் மீது கையை வைத்தாள். நான் திரும்பி அவளைப் பார்த்தேன்.

பார்த்தீர்களா ? குழந்தை பிறப்ப தற்கு முன்பு குழந்தையே வேண்டாம் என்றவள். இப்பொழுது குழந்தையை அனைத்துப் பிடித்துக் கொண்டு படுத் திருப்பதை ?' என்ருள் சி ரி த் து க் கொண்டே.

சாரதா ஞள்.

' குழந்தையை எனக்குக் கொடுத்து விடு என்கிரு.ர்கள் டாக்டர் அம்மாள். ந்தத் தங்கச் சி லே ைய எப்படிக் காடுக்க முடியும் ?"

மெல்லிய

குரலில் சொன்

' குழந்தை வெள்ளிக் கிழமை பிறந் திருக்கிருள். லக்ஷமி என்று பெயர் வைத்து விடு. நான் வேடிக்கையாகக் கேட்டேன் சாரதா. தவருக நினைத்து விடாதே. நீ ஏதாவது அசட்டுத்தன மாகச் செய்து விடாமல் அந்த மட்டும். சமர்த்தாக இருந்தாயே ?' என்ருள்

டாக்டர் சத்தியபாமா.

லக்ஷ்மி என்ரு கூப்பிடச் சொல் கிறீர்கள் ? நான் வேறு என்னவெல் லாமோ நி னை த் து க் கொண்டிருந் தேனே ?' என்ருள் சாரதா மகிழ்ச்சி பொங்கும் குரலில்.

இதுவரை பேசாமல் நின்றிருந்த என்னை ஏதோ ஒரு சக்தி பேச வைத்தது.

' குழந்தையின் கண்களின் பார்வை அன்பு மயமாக இருக்கிறது. பார்வை யிலே நயமும், அன்பும் மிதக்கின்றன. என் உள்ளத்திலே ஏதோ ஒன்று ஒயா மல் ஒரு நாமத்தைச் சொல்லி அதை உங்களுக்கு அறிவிக்கும்படி என்னேக் கேட்டுக் கொள்கிறது' என்றேன் நான். டாக்டரும் சாரதாவும் ஆவலோடு என்னைப் பார்த்தனர்.

நான் கண்களை மூடிச் சிறிது நின்றிருந் தேன். பிறகு ஆசையுடன் அந்தக் குழந் தையைப் பார்த்து, காமாட்சி " என்று பெயர் வைத்து விடலாம்' என்றேன்.

ஆஹா ! அப்படியே செய்யலாம். பேஷான பெயர் ஆயிற்றே ஒரு தரம் நினைத்தாலும் அழைத்தாலும் இன் பத்தை அருளும் பெயர் அல்லவா?' என் ருள் டாக்டர் சத்யபாமா.

குழந்தை காமாட்சி நித்திரையில் இருந்தாள். அவளுடைய விட்ட குறை யைப் பூர்த் செய்ய பூலோகத்தில் பிறந்து விட்ட சாந்தியில் அவள் முகம் மலர்ந்து நித்திரை செய்து கொண்டிருந் தாளோ என்னவோ ?