பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிர்மா அ ன் மை ய தி ன ச ரி ஒன்றைப் படித்துக் கொ ண்டே, சாய்வு நாற்காலியில் சாய்ந்து கொண்டி ருக்தார். உள் .ே ள அடுப்பங்காையில் அவர் மாட்டுப் பெண் ருக்மிணி சமைக்கும் அவசரத்திலிருக்தி இன்னும் கொஞ்ச நாழிகைக் கெல்லாம் அந்த வீட்டில் சாப்பாடு முடிந்தி விடும் என்று தோன்றியது. ருக்மிணி அவசர மாகக் காமா அறைக்குள் வர்தாள். அங்கு உட்கார்ர்திருக்க அவள் கன வன சமையல் அறைக்குள் அழைத்திச் சென்ருள்.

" சுடப் போகிறது. குழம்புக்கு எல் லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த் திச் சொல்லுங்கள் ” என்று அவன்

கையில் கொஞ்சம் மாதிரிக்காகக்

குழம்பை ஊற்றிள்ை.

" சரியாக இருக்கிறது என்று

கடறிவிட்டு ஜயராமன் மறுபடியும்

காமரா அறைக்குப் போய் விட்டான். உப்பு இல்லாமல் இருக்கால் கூட அவ னுக்குத் தெரியாது ! வயிற்றுப் பசிக்கு எதாவது சாப்பிட வேண்டுமே என்று கினைத்து, மனைவி போட்டசைச் சாப்

பிட்டு விட்டுப் போய் விடுவான் ஜய சாமன்.

அவனுடைய குணத்துக்கு சேர் விசோதமாக இருந்தது, அவனுடைய

தகப்பனர் சர்மாவின் குணம். சமையலி லிருந்து பகடினங்கள் செய்வ வரை

அவர் தெரிந்து வைத்திருச்சார். ஒவ் வொன்றுக்கும் எவ்வளவு சாமான்கள் செலவாகும் என்பதும் அவருக்குத்

தெரியும் ஒரு மாசத்துக்குக் குடும்பத் துக்கு எவ்வளவு சாமான்சள் சேவை என்பது தெரிந்து அந்த அளவுதான்் அவர் வாங்கிப் போடுவார். மாதக் கடைசி பில் இல்லே’ என்று அவரிடம் சொல்லி சாமான்கள் வாங்கிவிடமுடியாது. சர்மா இவ்வளவு கெட்டிக்காாாக இருந்த சற்கு அவர் பால்யத்திலேயே மனை வியை

மாறுதல்

ஸரோஜா ராமமூர்த்தி

இழந்த கஷ்டப்பட் டது தான்் காரணம். மனைவி இறந்த பிறகு சமையலுக்கு வ ச் ச ஆட்கள் யாரும் அவ ரிடம் நிலைக்கவில்லை. குழம்பில் வாஸனை இல்லை; ஊறுகாய்போட த் தெரியவில்லை’ என்று எதாவது குற்றச் சாட்டுகளு டன் அவர்கள் மாசம் ஒருவராக மாறிக் கொண்டே வந்தனர். அ. வ ர் க ள் வேலையை விட்டுப் போய் விட்டதால் சர்மா கவலைப்படவில்லை. பள்ளிக்கூடம் போகும் பிள்ளை ஜ ய ரா ம னு க் கு ச் சமைத்துப் போட்டுவிட்டுக் கா மு. ம் சாப்பிட்டு முடித்துக் கொண்டு காரியால யத்துக்குக் கிளம்பி விடுவார். அங்கேயும் தமது சண்பர்களிடம் காம் செய்யும் சமையலைப் பற்றியே பேசி அளவளாவு வதில் அவருக்குப் பாம திருப்கி.

இவ்வளவு கெட்டிக்கார மனிதருக்கு வந்து வாய்த்த மாட்டுப் பெண்ணுக்கு சமையல் அவ்வளவாகத் தெரியாமல் இருந்தது அவருக்குப் பெரிய குறையாக இருந்தது. ஒட்டலிலிருந்து லெட் ’ வரவழைத்துச் சாபமிடும் இந்தக் காலத் தில், யாரும் இதை அவ்வளவாகப் பாராட்ட மாட்டார்கள். இருக்தாலும் சர்மாவுக்கு மாட்டுப் பெண்ணைத் துவதிக்க இது ஒன்றே முக்கிய காான மாயிற்று.

கூடத்தில் இருந்த கடிகாாம் பத்து அடித்து ஒய்ந்தது. சமையல் அறையில் இலை போட்டு மனை போடும் ஒசை டக்” சென்று கேட்டது சர்மா தம் மூக்குக் கண்ணுடியைக் கழற்றி வைத்து விட்டு சாப்பிட எழுந்தார். அவர் உள்ளே வரு வதற்குள் ருக்மிணி இன்னெரு தடவை குழம்பை ருசி பார்க்கச் சொல்லி தன் கணவனைக் கூப்பிட்டாள். அவன் முடி யாதென்று மறுத்து விடவே கோபச் தில் முகம் சிவக்க சமையலறைக்குள் சென்று விட்டாள்.

பாதி வரைக்கும் சாப்பிடுகிற மட்டும் சர்மா வாய் திறக்க வில்லை. இன்றைக்

45