பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வந்திருக்கிருேம். உங்களுக்குப் புரியும் என்று நினைக்கிறேன். கிராமத்தில் எத்தனையோ விஷயங்கள் பின் தங்கி இருக்கின்றன. இருந்தாலும்,_ இந்த எளியவர்களிடம் உள்ள சில திறமை களை நாங்கள் கற்றுக் கொண்டு, எங்க ளால் முடிந்த சேவையைச் செய்ய வந்திருக்கிருேம் ..... உங்கள் மகன் முத்து, பட்டாளத்தில் சேர்ந்திருக் கிருராம். தேசத்துக்காக ஒருவனே அர்ப்பணித்த வீரத் தாயைப் பார்த் துப் பேசவே வந்தேன், அம்மா...'

ரங்கம் மாணவனின் பேச்சைக் கேட்டுக் கண்களில் வழிந்த கண் ணிைரைத் துடைத்துக் கொண்டாள். அவனே அண்ணுந்து பார்த்தாள். ஏறக் குறைய முத்துவின் வயதுதான்் அவ னுக்கும் இருக்கும். முத்துவை விட சற்று உயரமாகவும், சிவப்பாகவும் இருந்தான்். கிராப்புத் தலையை வாரி விருக்கும் விதம், உடை அணிந்திருத் கும் விதம் யாவுமே முத்துவைப்போல் இருந்தன. ரங்கத்தின் உள்ளம் அன் பால் நிறைந்தது.

உள்ளே வா தம்பி! காப்பி பல காரம் சாப்பிடு. அப்புறம் என் மகன் இட்டே யிருந்து ஒரு கடுதாசி வந் கக்கு. அதைப் படிச்சுக் காட்டிட் 瀏 . கடுதாசி படிக் இக் கண்டவிங்களைத் தேடிப் போக வேண்டாம்னு சொல்லு... ஒன் பேரு என்ன தம்பி?’’

சண்முகம்.' இளைஞன் புன் உள்ளே நுழைந்தான்். கொண்டு வைத்த காப்பி, தைச் சாப்பிட்டான். ==

உனக்குச் சாப்பாடெல் என்று கேட்டாள்

முறுவலுடன் திரெளபதி

பலகாரத்

தம்பி! லாம் எங்கே?' ரங்கம்.

கூட வந்திருப்பவர்கள் சமைக் ஒருர்கள் அம்மா....' என்ருன் சண் முகம்.

"பரவாயில்லே தம்பி. நீ இங்கே இருக்கிற வரைக்கும் நம் வீட்டிலேயே சாப்பாட்டை வைத்துக் கொள். உன் னைப் பார்த்தால்..' ரங்கம் வார்த் தையை முடிக்கவில்லை. அவள் கண் இன் மகனின் படத்தில் சென்று நிலைத்

தன. மீண்டும் அவள் விழிகளைத் திருப்பிய போது கண் ர் உருண்டது: 'ஆகட்டும் அம்மா. . . . எனக்கும்

வயது சென்ற நானும் ஏழை

உங்களைப் போல 畢 தாய் இருக்கிரு.ர்கள்.

70

தான்். சர்க்காரின் உபகாரச் சம் பளத்தில் படித்தவன். அம்மாவைப் பார்த்து ஒரு வருஷம் ஆகிறது. கிரா மத்தில் வேலை முடிந்ததும் ஊருக்குப் போக வேண்டும்...' என்ருன் சண் முகம்.

அன்றையிலிருந்து சண்முகம் அவர் கள் குடும்பத்தவன் போல் பழகி வந் தான்். முத்துவின் கடிதங்களைப் படிப் பது மட்டுமல்லாமல், பொழுது போக்குக்காகப் பல கதைகளும் கூறு வான். கடைத் தெருவுக்குப் போய் சாமான்கள் வாங்கி வருவான். கிணற் றிலே நீர் இறைப்பான். இப்படி அந்தக் குடும்பத்தில் ஒட்டி வாழ்வதில் அவன் உள்ளத்துக்கும் ஒர் ஆறுதல் ஏற்பட்டிருந்தது.

0ெம்ெ காசி மாதம் பிறந்து விட்

டது. கத்தரி வெயிலின் கொடுமை ஊரை ஆட்டிப் படைத்தது. ஊரில் எத் தனையோ வியாதிகள். மாணவர்கள் சமூக சேவை செய்வதால் ஊரில் வியாதிகள் அதிகம் பரவாமல் இருந் தன. வெயிலின் கடுமை தெரியாமல் இருக்க சண்முகம், ரங்கத்தின் வீட்டு வாயிற்படி அருகில் தென்னங் கீற்று வேய்ந்து பந்தல் போட்டுக் கொண் டிருந்தான்். திரெளபதி கட்டுகளாகக் கீற்றுகளை எடுத்துக் கொடுத்து உதவிக் கொண்டிருந்தாள்.

ரங்கம் வெற்றிலையைக் குதப்பிய படி, பனிவரையின் தனிமையில் காவல் புரியும் தன் மகனைப் பற்றிய கற்பனை யில் மூழ்கி யிருந்தாள். கிழவி துரங்கு கிருளா, விழித்திருக்கிருளா என்று சொல்ல முடியாது. உள்ளம் எண் னங்களை அசை போட, அதன் சுகத்

திலே தன்னையே மறந்திருந்தாள் அவள்.

சார்! தந்தி!....' சிவப்புச் சைக்

கிளைத் தள்ளிக் கொண்டே தந்திக் காரர், நிழலுக்காகத் தென்னே மரத் தின் கீழே ஒதுங்கினர்.

மேலே இருந்த சண்முகம் குதித் துக் கீழே இறங்கிளுன் கையெழுத் திட்டுத் தந்தியைப் பிரித்தான்்.

'தி.... டி.பன்ஸ் மினிஸ் ட்ரி ரிக் ரெட்ஸ்ட்...' என்கிற வாக்கியங்களைப் படித்தவன் மலைத்துப் போய் நின் முன். அவன் பூராவும் படிப்பதற்கு முன்பு தந்திக்காரரின் சைக்கிள் துாரத் தில் சென்று மறைந்தது: