பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

«-18O

ஈடுபட்டிருப்பதைக் கவனித்தாள்.

"என்ன யோசனை ?' என்று கேட் டும் வைத்தாள்.

'ஒன்றுமில்லை' என்று பீடிகை போட்டுவிட்டு, 'அந்தப் பெண் எவ் வளவு அழகாக இருக்கிருள் பார்த் தாயா?’ என்ருன்.

'பார்த்தேன், ப ார் த் தே ன், ஆமாம்... ராத்திரி உங்களுக்கு என்ன ஆகாரம் என்று கேட்டீர்களா ?" என்று பேச்சை மாற்றிள்ை ரமா.

இதற்குள் வார்டு பையன் தாமு வந்துவிட்டான்.

சார் இப்படிக் கொஞ்சம் வlங் களா?' என்று கேட்டு மோகனே மாடிக்கு அழைத்துச் சென்ருன்.

ரமா வெளியில் வந்து ஒன்றும் புரியாமல் கின்ருள். சற்று முன்வந்து தன் அழகை அள்ளித் தெளித்து விட்டுப் போன நர்ஸ் வராந்தாவில் கையைக் கட்டிக்கொண்டு இப்படி யும், அப்படியும் உலவிக் கொண் டிருந்தாள்.

டும் என்று அவளே என்ன வென்று அழைத்து, எதைக் கேட் பது என்பது புரியாமல் விழித்தாள் ரமா. என்னதான்் படித் திருந்தா லும் சமயத்தில் விழிக்கத்தர்ன் வேண்டியிருக்கிறது !

வராக்தாவின் மறுகோடியிலிருந்து கர்ஸ் திரும்பி வரும்போது ஒரு புன் முறுவலே அ வ ள் மீ து வீசிக் கொண்டே. இப்ப வந்து அவரை... .. ' என்று அவள் கேட்பதற்கு முன்பாகவே நறுக்கென்று பதில் கூறிவிட்டாள் ஆர்ஸ். அளக்கு அவருக்கு ஆப்பரேஷன், இல்லையா? முன்னுடி எனிமா கொடுத்து, வயிற்றைக் கட்டிவைக்கவேண்டும்' சொல்லிவிட்டு அவள் கிற்கவில்லை. மோகனிடம் பேசியபோது காட்டிய முறுவலும், குழைவும் இல்லை.

ரமாவுக்கு என்னவோ போல் இருந்தது. முகத்தைத் திருப்பிக் கொண்டு உள்ளே போய்விட்டாள். சிறிது நேரத்துக்குப் பி அவள் வெளியே ്, ఫీ வெயி

தாமரை

லின் தங்க ஒளி சுவரெல்லாம் முலாம் பூசியதுபோல் மின்னியது.

காலாற அந்தக் கட்டிடத்தைச் சுற்றி வந்தாள் அவள். தோட்ட மெங்கும் வெள்ளேயும், சிவப்பும், லேமுமாகக் கொத்துக் கொத்தாக மலர்ந்திருக்கும் காசித் தும்பைச் செடிகள், அவைகட்கு அரண் கட் டிய சீமைப் பொன்னங்கணிக்கீரை, ஒரு சுற்று, இரண்டு சுற்றுகள் மூன்று சுற்றுகள் என்று மருத்துவ மனையைச் சுற்றிச் சுற்றி வந்தவள், மாடிக்குச் சென்ற கணவன் திரும்பி விட்டாளு என்று பார்க்க உள்ளே வருதாள.

கட்டிலில் படுத்திருந்த அவன் வலக் கையைப் பிடித்து நாடியைச் சோதித்தவாறு கி ன் றிருந் தா ள் அந்த கர்ஸ். முகத்திலே மென்முறு

வல். அவ னு ம் அவளேத்தான்் பார்க்கிருன் ; பார்த்துக்கொண்டே இருக்கிருன்.

சீ.சீ......... இந்த ஆண்களே

இப்படித்தான்். அழகைப் பார்த் தால் பல்லேக் காட்டிக்கொண்டு '

உள்ளம் பயங்கரமாகத்தான்் அல றியது. ஆனால் அந்த அலறல் வெளியே வரவில்லை. பேரிரைச்ச லுடன் பொங்கிவரும் அகிலயொன்று கரையில் வந்து மோதி வந்த சுவடு தெரியாமல் மறைவதுபோல், எண் ணம் மனத்திலே உருப்பெற்று .ெ பா. ரு மி மனத்துக்குள்ளேயே மோதி கசித்தது.

' ராத்திரிக்கு பாலும், ரொட்டி யும்தான்் ஆகாரம். அதுவும் கொஞ்ச மாகக் கொடுங்கள்... ...'

உத்தரவு இடுவதுபோல் கூறி விட்டு வெளியே போய்விட்டாள் அவள்.

ரமா. ஜன்னல் வழியாக வெளியே பார்த்தாள். வானம் ஒரே நீலமாக இருந்தது. பொட்டுப் பொட்டாக புள்ளி வைத்தாற்போல் தாரகைக் கூட்டங்கள் மினுங்கின. வெளியே வருவோர் போவோரின் சக்தடி குறைந்துவிட்டது. கோயாளியுடன்