பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகத்தை ஒரு திருப்புத்திருப்பி இருபத்தேழு' எ ன் ரு ஸ். தொடர்ந்து நாற்பத்தைந்து வரையில் இருவரும் போட்டி போட்டார்கள். "சீட்டுக்கார ஐயா! இவர் என்ன ஏழைகள் வாயிலே மண்ணைப்போடவா சிட்டிலே சேர்ந் தாரு நூற்றி ஐம்பது ரூபாய் சீட்டுக்கு ஐம்பது ரூப்ர்ய் தள்ளி எடுட்பதா? அநியா யங்க......' என்ருள் நப்பின்னை துரைவேலு வைக் கோபத்துடன் விழித்துப் பார்த்து.

'ஏலச்சீட்டு என்றால் அப்படித்தான்் இருக்

கும்னு சொல்லுங்க, அண்ணே!' என்ருன் துரைவேலு.

கடைசியாக முனியம்மாளுக்குப் பயந்து

சீட்டைத் துரைவேலுவுக்கு விட்டுக்கொடுத்து விட்டுக் கோபத்துடனும் துயரத்துடனும் நப்பின்னே விடு திரும்பிளுள்.

தாயிடம் அங்கு நட்ந்தவைகளைக் கூறி, 'அந்த மனுசன் ஏதோ முடைக்கு வந்து அப்படிக் கேட்கவில்லை. அம்மா! வேண்டு மென்றே போட்டியில் ஏலத்தை எடுத்திட் டாரு' என்ருள். ==

"கிடக்குது விடு. அடுத்த மாசம் பார்த்துக் கலாம்' என்ருள் கிழவி.

"விடவாவது? பெண்பிள்ளை கடை வைத் துச் சம்பாதிப்பதா என்று அந்த மனுசனுக்கு ஆத்திரம். அதுக்கு நான் பணிய மாட்டேன். மாட்டை நாளைக்குப் பல்லாவரம் சந்தை யிலே விற்றுவிடப் போகிறேன்......'

படுக்கையில் கிடக்கும் கிழவியால் மகளை அதட்ட முடியவில்லை. அதட்டிலுைம் அவள் பணிந்துபோகமாட்டாள் என்பதும் தெரியும். அன்று விளக்கு வைத்த பிறகு, நப்பின்னை மாட்டுக்குத் தவிடும், பிண்ணுக்கும் பிசிறி வைத்தாள். கையிருப்பில் இருந்த நாலு வைக்கோல் பிரிகளில் இரண்டை இரவுக்காக வைத்துக்கொண்டு அண்டையில் மாடு வைத் திருக்கும் ஒருவரிடம் மீதி இரண்டு பிரிகளே யும் கொடுத்து விட்டாள் நப்பின்னை.

"'என்ன இது?' என்று அதிசயித்தாள் அந்த வீட்டுக்காரி.

"அப்படித்தான்் அண்ணி! விடியற்காலம் சந்தையிலே மாட்டை விற்றுவிடப் போகி றேன்...... ' என்ருள் நப்பின்னே.

"தே......சும்மா கதை விடாதே......'

'இல்லை. அண்ணி! நிசமாத்தான்் விற்கப் போகிறேன். அந்த ஆரணிக்காரரு என்ன இந்தப் பரங்கிமலைக்கே ராசாவா!'

அடுத்த விட்டுக்காரிக்கு விஷயம் புரிந்து விட்டது. நப்பின்ன சென்ற பிறகு அவள் தன் கணவன் கலத்தில் குழ்ம்பை ஊற்றிக் கொண்டே இந்தச் செய்தியை அவன் காதில் போட்டு விைத்தாள். அந்தச் செய்தி காற்றி னும் கடிய வேகத்தில் துரைவேலுவுக்கு ஒலி பரப்பப்பட்டது.

பல்லாவரம் சந்தையில் ஒரு புளிய மரத் தடியில் எருமையைப் பிடித்துக் கொண்டு நின்றிருந்தாள் நப்பின்ன. அவள் கண்கள் கலங்கி யிருந்தன. நொடிக்கொருதரம் அதன் முகத்தையும், கழுத்தையும் பரிவுடன் தட விக் கொடுத்தாள் அவள். அதன் கண்களி லிருந்தும் கண்ணிர் பெருகிக் கொண்டே யிருந்தது.

சந்தை ஆரம்பித்து இரண்டு மணி நேரம் வரையில் யார் யாரோ வந்து விலை கேட்டார் கள். சிலர் நியாயமாகக் கேட்டார்கள். சிலர் அநியாயமாகப் பேரம் பேசினர்கள். நப் பின்ன, அத்தனை சடுதியில் பிரிய முன மில்லாமல் பொழுதைக் கடத்திக் கொண்டே வந்தாள்.

கதிரவன் உச்சி வானத்துக்கு வந்து கொண் டிருந்தான்். மைதான்த்தில் அனல் காற்று வீசத் தொடங்கியது. இனிமேல் பொழுதை ஒட்டக் கூடாதென்று நப்பின் சுற்று முற்றும் பார்த்தாள்.

' என்ன தங்கச்சி? மாட்டை விற்க வந் துட்டாயாம்ே?' என்று கேட்டுக் கொண்டே ப்ரங்கிமலைக் கதிரேசன் அவள் எதிரில் நின் முன். அந்த உள்ளில் யாரும் அவனுக்குத் தெரி ப்ாமல் மாடு பிடிக்கவோ, விற்கவோ மாட் டார்கள். வாரம் தவருமல் சந்தைக்கு வரு வான் கதிரேசன்.

"ஆமாம். அண்ணுத்தை! விற்கத்தான்்.' 'நல்ல கறவை மர்டாச்சே! எதற்கு அம்மா அதை விற்கணும் இப்போ?'

"அப்படித்தான்், அண்னத்தை! விற்றுத்தான்் ஆவனும்

சரி! இந்தர் பிடி நூற்றைம்பது ரூபாய், மாட்டை நான் வாங்கிக்கிறேன்......'

அதை