பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீயா வாங்கிக்கறே? உன் வீட்டிலே யாரு இதைக் கவனிப்பாங்க?"

கதிரேசன் ஒண்டி_ஆள். சாப்பாடும் மிடத்திலே தூக்கமும் என்று கூறுவது போல் கிளப்பில் சாப்பாடும் ரயில் நிலையத்தில் வாசமும் வைத்துக் கொண் டிருந்தான்்.

"ஏன் தங்கச்சி ! நான் மாடு வாங்கக் கூடாதா?' என்று கேட்டான் அவன்.

"அப்படிச் சொல்லலேயே நான் ? உனக்கு மாடும் கன்றும் என்னுத்துக்கு அண்ணுத்தை ? உனக்கு ஒரு வேளை கல்யாணம் ஆவப் போவுதோன்னு சந்தேகம் எனக்கு....."

கதிரேசன் சிரித்துக் கொண்டே பணத்தை எண்ணி அவள் கையில் கொடுத்து விட்டு, மாட்டை வாங்கிக் கொண்டான்.

தூரத்திலே மாடும் கதிரேசனும் போவ தைப் பர்ர்த்துக் கொண்டே ஒரு பெருமூச்சு விட்டாள் நப்பின்னே.

அன்று, அவள் வீட்-ை அடைந்தபிறகு வேறு வேலை ஒன்றும் செய்யத் தோன்ற வில்லை. அவசரத்தில், ரோசப் பட்டுக் கொண்டு, பல வருஷங்களாக ஊட்டி வளர்த்த மாட்டை விற்றது அவளுக்குச் சரியாகத் தோன்றவில்லை. பிரமை பிடித்

தவள் போல் அடுப்படியில் உட்கார்ந் திருந்தாள்.

'இட்டிலிக்கு மாவு அரைக்கலியா ?"

என்று முனியம்மாள் மகளைக் கேட்டாள்.

ா . என்று சூள் கொட்டினுள் நப்பின்ன. கொல்லப்புறம் திரும்பிப்பார்த்த பொழுது மாட்டுக் கொட்டில் வெறிச்' சென்று கிடந்தது. நப் பின்னையைக் கண்டால் தன் தலையை ஆட்டி வரவேற்கும் அந்த மாடு இல்ல்ாமல்_வாழ்க்கையே வெறிச்சோடிப் போன மாதிரி இருந்தது அவளுக்கு. எருமை யாக இருந்தாலும் அதற்கு அறிவு அதிகம். நப்பின்ன்ே தன் தோழி ஒருத்தியுடன் பேசு வது போல, அதன் கழுத்தைச் கட்டிக் கொண்டு பல செய்திகளைப் பேசியிருக்கிருள்.

அடுப்பிலே இருந்த சுக்குத் தண்ணிரை இறுத்து வெல்ல்ம் போட்டுத் தாய்க்குக் கொடுத்துத் தான்ும் சாப்பிட்டாள் அவள். தன்னுல் அன்று மாவு அரைக்க முடியவில்லை என்கிற பொய்யைச் சொல்லி விட்டு விளக்கு ஏற்றியதும் படுத்து விட்டாள் அவள்.

கீழ்வானம் வெளுத்துக்கொண்டு வந்தது. அன்று கருக்கலில் எழுந்து செய்ய எந்த வேலை யும் அவளுக்கு இல்லை. மாட்டுக்குத் தீனி ன்வக்க வேண்டாம். பலகாரக் கடையும் வைக்க மாவு அரைக்கவில்லை. கனத்த இத யத்துடன் மெதுவாக எழுந்து நப்பின்னே கொல்லேப் பக்கம் சென்ருள்.

அங்கே அவள் மாடு கொட்டிலில் கட்டப் பட்டிருந்தது. துரைவேலு அதற்கு வைக் கோலை உதறிப் போட்டுக் கொண்டிருந்தான்். அகிய அதிசயத்தால் கண்களே மலர்த்தி அவனைப் பார்த்தாள்.

"என்ன பார்க்கிருய்?' என்று குறும்புத் தனமாகக் கேட்டான் துரைவேலு.

சத்திரத்திலே

து. டைம் வெளியில் போய் விளேய"லாம், வர் றயா? ா

குஞ்சு வாத்துக்கு இல்ாடைா! எனக்கு சிெம்ப ஜோவி இருக்கு: இதெல்லாத்தையும் கன்ட்ச்சர்க்னும் வருகிறதுக்கு இல்லேடா !

இந்த மாடு இங்கே......'

இது என்_மடு, நான்தான்் கதிரேசனே உன்னிட்ம் விலைபேசி வாங்கச் சொன்னேன்."" "சொன்னிங்க மாடு வாங்க மூன்ருவது ஆள் தேவையா உங்களுக்கு! நீங்களே வரு கிறதுக்கு என்ன?' o

வந்தால் நீ-கல்லை விட்டு அடிப்பியே.-- ஆமாம்........இன்னிக்குச் குடா ஒண்னும் இல்லையா?..."

ஆத் آية 6 كانت -- " " ... وكيفيق و... ويتجاعي .. திரத்துடன் பற்களைக் கடித்தாள். * உள்ளேயிருந்து கிழவி குரல் கொடுத்தாள். .ெ பொன்னோவிடிஞ்சதும் யாருகிட்டே சண்டை?"

'நீ சும்மா இரு அம்மா! இவரு விவகாரத் தைத் தீர்த்துப்பிடணும்.'

"நானும் அதுக்காகத்தான்் ஆரணியி லிருந்து வந்து நாலு மாதம" கிளப்பிலே சாப் பிட்டுக்கிட்டு இருக்கேன். விஷயம் இன்னிக் குத் தீர்ந்து பேர்கனும்......'

துரைவேலு சிரித்தான்். கிழவி மறுபடியும் பேசிள்ை. "யாரு தம்பீ! இப்படி வாயேன்... பெரியசாமி விட்டுப் பிள்ளையா நீ?...'

"ஆமாம். அத்தை! பரிசம் போடவந்தால் உங்கள் மகள் கல்லே விட்டு எறியுது...'

H. H. ஒரு பைத்தியம்! நீ உள்ளே வா தம்பி! 'வியாதிக்காரியான முனியம்மாள் மகிழ்ச்சியே வடிவாக உரக்கக் கூப்பிட்டாள். 'அத்தை கூப்பிடருங்க, நீ வா உள்ளே..." என்றவாறு துரைவேலு உள்ளே நுழைந்தான்். நப்பின்னேயின் முகம் காலக் கதிரவனின் ஒளியில் செழிக்கும் செந்தாமரை போல் சிவந்து காணப்பட்டது.

ஆரணி