பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/361

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

%ரசன2த் திகத7

|

ஜன்னலின் திரைச் சிலையை நீக்கிவிட்டு ருக்மிணி அடுத்த வீட்டைப் பார்த்தாள். சுதா எப்படியும் பகல் சாப்பாட்டுக்கு விட, டுக்கு வந்துதான்் ஆக வேண்டும். என் அவசரமான கால்வrட்டாக இருந்தாலும் பகலில் அவள் தன் கணவனுடன் சேர்ந்து சாப்பிடுவதையே விரும்புகிருள். ருக்மிணிக் குத் தெரிந்த விஷயம். இருவரும் அடுத் தடுத்த வீடுகளில், வசிப்பதால் ஏற்பட்ட நட்பு அல்ல அவர்களுடையது. அரிச்சுவடி வகுப்பிலிருந்து காலேஜ் வரை ஒன்ருகப் படித்தவர்கள். ருக்மிணி தனக்குத் திருமணம் ஆனவுடன் சுதாவைத் ருமணம் செய்து கொள்ளும்படி கூறி வற்புறுத்தி செயலில் நடத்தியும் வைத்தாள்.

ருக்மிணியும், சுதாவும் பள்ளிக்கூட

நாடகங்களில் ஒன்ருக நடித்தவர்கள். ஆனால், நடிப்பைப் பொறுத்தவரை சுதாவுக்குத்தான்் முதல் மார்க். குரலினிமையிலும், இசை யிலும் திறமையானவள் ருக்மிணி.

சுதா திடும்மென்று தன் தோழியிடம் ஒரு நாள் தான்் திரைப் படங்களில் நடிக்கப் போகும் செய்தியை வெளியிட்டாள். என்ன தான்் ருக்மிணி முன்னேற்றக் கருத்துக்களுக்கு ஆதரவு அளிப்பவளாக இருந்தாலும் ஷாக்" அடித்தாற்போல் சில நிமிடங்களுக்கு ஒன்றும்

பேசத் தோன்ரு மல் நின்ருள்.

என்னடீது? ஒரே மெளனம்?' என்று சுதா அவள் தோள்களைப்பற்றி உலுப்ப வேண்டியிருந்தது.

'அப்பா...உன் அப்பா சரீன்ஞராடீ?" என்று கேட்டு வைத்தாள். சுதாவுக்கு இந்தக் கேள்வி பிடிக்கவில்லை. அவள் அப்பாவைப் பற்றி இப்படியொரு கேள்வியைத் தன் தோழி கேட்டு வைத்ததும் பிடிக்கவில்லை.

இம்மாதிரியான விஷயங்களுக்குத் தன் முழு ஆதரவையும் அவர் எப்போதுமே அளித்து வருகிறவர் ஆயிற்றே! இதென்ன அசட்டுக்

கேள்வி வேண்டிக் கிடக்கிறது! * 3.

'உன் அபிப்பிராயத்தைச் சொல்லித் தொலேயேண்டி ருக்கு. அதை விட்டுட்டு அப்பா குப்பான்னு எது க் குக் குட்டை குழப்பறே?'

என் அபிப்பிராயத்தைக் கேட்டா,

பள்ளிக்கூட. காலேஜ் நாட்கங்களிலே ருந்து நீ ரிடையர் ஆகி விடேன். சினிமா கினிமான்னு எதுக்குடி? நான் அதைப்பற்றி மட்டமா நினைக்கலே. இருந்தாலும், நம்ப ஜனங்களு டைய மதிப்பு சினிமாவைப் பத்தி உசரணும்.