பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதை ஒரு பொழுது போக்குன்னு நினைக் கறதைவிட அதை ஒரு கலைன்னு மதிக்கணும். அந்த மதிப்பீட்டில் அது உயரும்போது தாரா ளமா யார் வேண்டுமானுலும் நடிக்கலா மேடி...'

சுதா சிரித்து விட்டுப் போய் விட்டாள். அதன் பிறகு பத்து நாட்களுக்குள் கதா நடிக்கப் ப்ோகும் ப்டத்தைப்பற்றி விளம்பரம் புத் திரிகைகளில் வந்தது. சில மாதங்களில் நடித்த படங்களும் திரைக்கு வந்தன. ருக்மிணி யும் தன் ஆருயிர்த் தோழிக்கு ஆற்ற வேண்டிய கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்து, தன் கணவர் மூலமாக நல்ல வேலையில் இருக் கும் ஒருவனைத் தேடி சுதாவுக்கு மணமுடித்து வைத்தாள்.

"நடிப்பு உன் மனத் திருப்திக்காகவாவது இருக்கட்டும். இல்லை....உன்னை அறியாமல் அது உன்னேக் கவர்ந்து விட்ட து என்ருவது இருக்கட்டும். நீ ஒரு குடும்பப் பெண்._மன ம்ானவள் என்கிற் பெயர் உனக்குப் பெரிய கவசமாக இருக்குமடி...' என்ருள் ருக்மிணி.

சுதாவும் அவள் கணவன் ரவியும் இப் போது சேர்ந்து சிரித்தார்கள்.

சுதா இப்போது திரைவானில் சுடர்விடும்

தாரிகை. பல பட்டங்களும், புகழ் மாலைகளும் அவளைத் தேடி வந்து கொண்டே யிருக்கின் றன. அவள் எவ்வளவுதான்் புகழ் ஏணியின் உச்சியில் இருந்தாலும், சமீப காலமாக அவள் அடிக்கடி ஏற்று நீடித்து வரும் ஒரு பாத்தி ரத்தைப் பற்றிய உறுத்தல் ருக்மிணியைக் கலங்க வைத்தது. வெள்ளைப் புடவையும், வெறிச்சோடிப் போன நெற்றியும், வெளுத் துப் போன முகமுமாக அந்த விதவை' ப் பாத்திரத்தில் சுதா பிரமாதமாக நடிப்பதாகப் பத்திரிகை சாற்றலாம். ரசிகர்கள் வரவேற்று மகிழலாம். அந்தப் பாத்திரத்தில் நடிப்பு தால் ஏற்படும் புகழ் மாலேகள் சுதாவைத் திணற அடிக்கலாம்.

_5া23্যাগুgrা ராமமூர்த்தி

ஆனால், பாரத நாட்டுப் பெண்கள் எந்த ஒரு கோலத்தைக் க ற் புனே யி லும் விரும்ப மாட்டார்களோ அதை இவள்...

ருக்மிணி ஜன்னலில் புதைத்திருந்த முகத் தைத் திருப்பிக் கண்ணுடியில் பார்த்துக் கொண்ட்ாள். பட்டும் படாததுமாகப் பூசப் பட்ட மஞ்சள் பூச்சின் நடுவே நெற்றியில் ஒளிரும் குங்குமம். இரண்டு முக்கிலும் சுடர் விடும் மூக்குத்திகள், மஞ்சள் கயிறு பசும் ப்ொன் இல் குளிப்பாட்டிய மாதிரி மஞ்சள் பூச்சுடன் கழுத்தில் மின்னியது. இந்த மங்கள கரமான தோற்றத்தையே ஒவ்வொரு பெண் னும் மகிழ்ந்து வரவேற்று பெறற்குறிய பாக்கியமாக் அல்லவா கருதுகிருர்கள். இந்த அசடு மட்டும் ஏன் வெள்ளைப் புடவையும்,

--