பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/385

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்படியால்ை சோமுவை அவர்க ளிடம் அனுப்பிவிட வேண்டியதுதான்், ஜானகி, பாவம், குழந்தை எகு இத்தனை

காலம் எவ்வளவோ கன்முக இருக்க வேண்டியவன், ஏழைமையில் வளர்ந்து விட்டான் ! இனிமேலாவது சன்முக இருக்க வேண்டாமா ?”

" என்ன, சோமுவையா ?’ என்று

ஜானகி கிடுக்கிட்டுக் கேட்டாள்.

TH. ஆமாம்.’’

  • நினைத்தப் பாருங்கள், அவனுக்காக ாான் எவ்வளவு கஷ்டப்பட்டிருப் பேன்...?’ என்று கடறிவிட்டு, ஜானகி விசும்பினள்.

o 畢 譚

ITனகி இக்க விஷயத்தை பங்கஜத்

கடறியபோது அவள் உணர் விழந்து போளுள். செல்வமும் சீரும் இல்லாமற் போனலும் தன்னுடைய அன்பு ஒன்றையே குவுக்கு அளித்து வளர்த்தவள் அவள்.

பங்கஜத்தின் கணவன் இந்த ஆச்சர்ய மான செய்தியைக் கேட்டான். அவ லுடைய வறுமை அவனைப் பாசமற்றவ ஒக்கியது.

"அவர்களுக்கென்ன, பணக்காரர்கள்! காசு கொடுத்து வேண்டுமானலும் இன் ஞெரு குழந்தையை வாங்கி வளர்க்க முடியும் சோமுவை அவர்களே வை: தக் கொண்டிருப்பதாளுல் கொஞ்சம் பணமும், சகு சம்மிடம் வளர்வதற்கா கக் கொஞ்சம் பணமும் கொடுத்தார்க ளானல் எதாவது வியாபாாமாவது செய்யலாம். இல்லாவிட்டால் ரகுவை அனுப்பிவிட்டு, சோமுவை அழைத்து வந்து விடு ’’ என்று கூறினன் அவன் சன் மனைவியிடம்.

திடம்

ஆசையுடன் தன் அருகில் கித்திரை புரியும் பாலகன் ரகுவைப் பார்த்ததும் பங்கஜத்தின் கண்களில் நீர் சார்தது.

அரும்பாடுபட்டு வளர்த்த குழர்தையை கேவலம் பணத்துக்காக அனுப்பி விடுவதா ? கர்ணன் உயர்வா; அர்ஜனன் உயர்வா என்கிற பிரச்னையைக் கிளப்பி விட்ட பூரீ கிருஷ்ண பாமாத்மா வின் கினைவு வந்தது பங்கஜத்துக்கு.

கர்ப்ப வாசத்தில் மறைக்து வளர்ச்து, பிறர்தவுடன் பிரிந்து வேறு இடத்தில் வளரும் சோமு தன்னுடைய பிள்ளை யாக அவளுக்குத் தோன்றவில்லை அர்ஜுனன் சான் பிள்ளை என்று அன்பு செலுத்திய குர்தி தேவியின் மனநிலை கான் அவளுக்கு எற்பட்டது.

மதலை மொழிகளும், இளம் பருவத்து விளையாட்டுகளும் விளையாடித் தன்னை மகிழ்வித்த குவை அவளால் எப்படிப் பிரிக் இருக்க முடியும்? உயிாைப் பிரிக்கு உடல் வாழ முடியுமா?

கண்ணிர் மல்க பங்கஜம் ரகுவை அனைத்துக் கொண்டாள். இன்னும் எழு ஜன்மங்கள் வறுமையில் உழன்ரு

அம், ரகுவைப் பணத்துக்காக அனுப்ப அவளால் முடியாது !

மாத்திரம் விளக்

பையன் :- " எனக்கு கெண்ணெய் கொடுக்கிறயே, அப்பாவுக்கும் கொடேன் !'

அம்மா.

அப்பா - " உங்க அம்மா எனக்குத் தான்் காப்பி கொடுத்திருக்காளேடா !'

57