பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/392

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

M

அந்தக் கிராமத்தில் பரம்பரை பரம்பரையாக வசித்து வந்தவர்கள் எல்லோரும் ஏழைகள். அந்த ஊர்க்

கோயிலும் ஏழைக் கோயில்தான்். அதில் வாசம் புரியும் இறைவனும், அம்பிகை யும் ஏழைகள்தாம். அந்த ஊர் மக்கள் அந்தக் கோயிலே, ஏழைக் கோயில் என்று தான்் அழைத்தார்கள்.

ஆம்...அவர்கள் இருட்டுக் கருவறை யிலே, கந்தல் உடுத்தி இருளோடு இரு ளாகவே பல ஆண்டுகளாக வாழ்ந்து பழக்கப்பட்டுப் போனவர்கள். திடீ ரென்று புரட்டாசி மாதத்திலே அவ்வூர் மக்களின் இதயத்தில் ஒளி வீசி தன்னு டைய இருக்கையிலும் ஒளியை நிரப்பிக் கொள்வாள் அன்னே. நவராத்திரி விழா ஒன்பது தினங்களிலும் அந்தக் கோயி லிலே விளக்கெரியும். வெறும் எண்னெய் விளக்கல்ல. ! ஊருக்குப் புதிதாக வந்து குடியேறிய பணக்காரர்இல்லத்திலிருந்து கிடைத்த மின்சார வசதியிஞல் மின் விளக்குகள் பளிச்சென்று எரிய, இங்கே

கோயிலின் ஏழைமையை மேலும் விளக் கிக் காட்டும். அபிஷேகம், ஆராதனே. அர்ச்சனே என்று அமர்க்களப்படும். ஊர் ஆண்களும், பெண்களும் பிராகாரத்தில் கூடி இருப்பார்கள். புதர் மண்டிக் கிடக் கும் மஞ்சள் அரளிச் செடிகளில் குழந்தைகள் கண்ணுமூச்சி ஆடுவார்கள். சாம்பிராணி, கற்பூரத்தின் புகை மண் டலத்தின் இடையே, அம்பிகையின் திரு உருவம் மேகம் சூழ்ந்த நிலவுபோல் ஒளிர்வதைப் பார்த்துத் தாயே" என்று எல்லோரும் கன்னத்தில் போட்டுக் கொள்வார்கள். *

பிறகு, சகஸ்ரநாம அர்ச்சனை நடை பெறும். வடை, பொங்கலுக்காகக் குழத்தைகள் காத்துக் கொண்டிருப் பார்கள். பிராகாரத்தில் பெண்கள் உட்கார்ந்து அவரவர் வீட்டு விஷயங் களேக் கொட்டி அளந்துகொண்டிருப்

பார்கள். அவர்களில் பெரும்பாலோ ருக்குப்பெரிய குறை-ஊரிலே இவ்வளவு அழகான கோயில் ஒன்று இருந்தும். அதில் விளக்குக் கூட எரியாமல் இருப்ப

தும், தங்கள் தோழிகளைச் சந்தித்துப் பேசி மகிழ இடமில்லாமல் இருப்பதும் தான்்.

வழக்கம்போல் அந்த வருவுமும் நவ ராத்திரி விழா ஆரம்பமாயிற்று. முதல் நாள் விடியற்காலம் கோயிலில் கொட்டு மேளம் கொட்டியது. தர்மகர்த்தா கந்தசாமி பிள்ளையும், ஊரில் பிரபலஸ்த ரான ஜம்புலிங்கமும், ஊர் நலனில் அக் கறை கொண்ட கேசவமூர்த்தி என்ற இளைஞனும் கருவறைக்கு வெளியே நின் றிருந்தார்கள். முத்துசாமி குருக்கள் ஒவ்வொரு அபிஷேகமாகச் செய்து கொண்டு வந்தார். பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம், பன்னிர் என்று வரிசை யாக நடைபெற்று வந்தது.

'அடடா!' என்று அலுத்துக் கொண் டார் குருக்கள்.

' என்ன மாமா?' என்று கேட்டான் கேசவமூர்த்தி.

"'என்னாப்பா' ஜம்புலிங்கம்.

என்று வினவினர்

இழைத் கோயில் உசரோஜா ராமமூர்த்தி உஅ

'என்னய்யா ஐயரே?_என்று மிடுக் குடன் கேட்டார் கந்தசாமிப் பிள்ளை.

ண்ைமிைல்லை. அம்பாளுகடய அப்தி:” கீழே எலியோ என்னமோ வளை வைத்திருக்கிறது. பெரிய புரை சல் ஒன்று தெரிகிறது. கொஞ்சம் லேசாக் அம்பாள் ஆடுவதுபோலத் தெரி கிறது' என்றார் முத்துசாமி குருக்கள்.

எத்தனை நாளாய் இப்படி இருக் கிறது மாமா?' என்று கவலையுடன் விசாரித்தான்் கேசவமூர்த்தி.

" தெரியலேயே அப்பா...' என்று கூறி குர் குருக்கள்.

"அவருக்கு ஏன் தெரியப்போவுது? போன நவராத்திரிக்குக் கோயில் கத வைத் தொறத்தாரு இந்த நவராத் திரிக்கு திரும்பவும் தொறத்திருக்காரு.' தர்மகர்த்தா பிள்ளையின் அலட்சியமான அபிப்பிராயம் இப்படி எழுந்தது.

Հ9